அடுத்தப் படத்திலும் ஹன்சிகா…..! – உதயநிதி ஸ்டாலின் சிபாரிசு?

731

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் அஹமத் இயக்கும் புதிய படம்.

இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி மற்றும் ஏமி ஜாக்சன் நடிப்பில் ‘கெத்து’ படத்தை தயாரித்து வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தற்போது புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளது.

‘என்றென்றும் புன்னகை’ வெற்றி படத்தை இயக்கிய அஹமத் இப்படத்தை இயக்குகிறார்.

கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதாநாயகியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். ஹன்சிகா உதயநிதியுடன் இணைந்து இதற்கு முன் ஓகே ஓகே படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஹன்சிகாவை உதயநிதி ஸ்டாலின் சிபாரிசு செய்ததாக செய்திகள் கசிகின்றன.

மற்றும், பிரகாஷ்ராஜ், ராதாரவி நடிக்கின்றனர்.

முதன்முறையாக உதயநிதி உடன் இணைந்து  முக்கிய வேடத்தில் நடிக்கிறார் விவேக்.

இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் நீதிமன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது

இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து பொள்ளாச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.