மனிதன் படத்தை ஓட வைக்க உதயநிதியின் மாஸ்டர் பிளான்…. படிச்சால் ஷாக் ஆகிடுவீங்க….

930

தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தால் திரைத்துறையில் உதயநிதி வைத்ததுதான் சட்டம்.

அவரை மீறி துரும்பைக் கூட அசைக்கமுடியாது.

திரைத்துறையில் உள்ள அமைப்புகள் கூட உதயநிதியின் கண்அசைவின்படியே இயங்கும்.

அதே அமைப்புகள் அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு உதயநிதிக்கு ஹலோ சொல்லக்கூட அஞ்சி நடுங்கும்.

இந்நிலையில் விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

கருத்துக்கணிப்புகளும், கருத்துத் திணிப்புகளும் அடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்பதுபோல் செய்தியை பரப்பி வருகின்றன.

இதை யார் நம்புகிறார்களோ.. இல்லையோ… உதயநிதிக்கு அடுத்தது நம்ம ஆட்சிதான் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

அந்த நம்பிக்கையின் காரணமாகவோ என்னவோ… திரைத்துறையில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கிவிட்டார் உதயநிதி.

‘என்றென்றும் புன்னகை’ படத்தின் இயக்குநர் ஐ.அஹமது இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் – ‘மனிதன்’.

‘ஜாலி எல்எல்பி’ ஹிந்தி படத்தின் ரீமேக்கான மனிதன் படத்தை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி.

அவர் நடித்த இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து ஆகிய படங்கள் தோல்வியடைந்ததால் மனிதன் படத்தை எப்படியாவது வெற்றியடைய வைத்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறார் உதயநிதி.

அதன் காரணமாகவோ என்னவோ…. மனிதன் படம் வெளியாகும் தினத்திலோ அதற்கு அடுத்து இரண்டு வாரங்களுக்கோ, மற்ற தயாரிப்பாளர்கள் யாரும் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தன்னுடைய சகாக்கள் மூலம் தயாரிப்பாளர்களிடம்  வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

போட்டி படங்கள் இல்லை என்றால் தன்னுடைய படம் வெற்றியடையும் என்று நம்பிக்கையில் இப்படியொரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்.

இதை அவர் மிரட்டலாக சொல்லவில்லை. அன்பாகத்தான் கோரிக்கை வைத்து வருகிறாராம் உதயநிதி.

அவர் அன்பாக சொன்னாலும்…. சொல்வது உதயநிதியாச்சே… அதை வெறும் அன்பாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாதே….

விரைவில் தேர்தல் வேறு வருகிறது.

இதை எல்லாம் மனதில் கொண்டு உதயநிதி நடித்த மனிதன் படம் ரிலீஸ் ஆகி, தியேட்டரைவிட்டு போகும்வரை தங்களுடைய படத்தை ரிலீஸ் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.