சிம்பு ரசிகர்களுக்கு மூளை இல்லையா? – பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்…!

1880

ஆர்யாவின் தயாரிப்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளி வர உள்ளநிலையில், அதற்கு போட்டியாக சிம்பு நடித்த ‘வாலு’ படம் திடீரென களத்தில் குதித்தது.

‘விஎஸ்ஓபி’ படத்தை வாங்கி வெளியிடும் உதயநிதிஸ்டாலின் வாலு படம் வெளியாவதை விரும்பவில்லை.

அதன் காரணமாக தன் பரிவாரங்களை ஏவிவிட்டு வாலு படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் தடைகளை ஏற்படுத்தி வருவதாக சிம்பு தரப்பில் குமுறிக்கொண்டிருந்தனர்.

கோபத்தை அடக்கமுடியாத சிம்பு ஒரு கட்டத்தில்,

‘‘வாலு பட ரிலீஸை தடுத்து நிறுத்துவதற்கு இப்போதும் சிலர் முயற்சித்து வருகிறார்கள்.” என்று ட்விட்டரில் பொங்கினார்.

உதயநிதியின் பெயரைக் குறிப்பிட்டு சிம்பு ட்விட் பண்ணவில்லை என்றாலும், வாலு படத்துக்கு சிக்கலை ஏற்படுத்துவது உதயநிதி ஸ்டாலின்தான் என்பதை சிம்புவின் ரசிகர்கள் புரிந்து கொண்டுவிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் உதயநிதியை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டனர்.

சில ரசிகர்கள் எல்லை மீறி உதயநிதியை திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சிம்பு ரசிகர்களின் திட்டுக்களை தாங்க முடியாத உதயநிதி அவர்களை பிளாக் செய்யவும் ஆரம்பித்துவிட்டார்.

( 23h23 hours ago  blocked me.so he accepted issue)

அப்படியும் அர்ச்சனையை தடுக்க முடியவில்லை.

uday-tweet

சிம்பு ரசிகர்களின் போக்கைக் கண்டித்து, ‘‘ரொம்பவும் காமெடியா இருக்கு. ‘வாலு’ படத்தை நான் ஏன் தடுக்க வேண்டும்? என்னால் எப்படி தடுக்க முடியும்? இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா? ஒரு முடிவுக்கு வரும்முன் நன்றாக யோசியுங்கள்.’’ என்று உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்தார்.

அப்படியும் சிம்பு ரசிகர்கள் அமைதியாகவில்லை.

‘‘இன்று காலை முதல் முழுநீள காமெடிக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அடுத்தமுறை கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். முட்டாள்தனம்! எந்த காரணமுமில்லாமல் என்னை டிரென்ட்டில் கொண்டு வந்த நண்பர்களுக்கு நன்றிகள்!’’ என்று மறுபடி பதில் அளித்தார் உதயநிதி.

அப்படியும் அடங்கவில்லை சிம்பு ரசிகர்களின் வசுவுகள். எல்லைமீறிப்போய்க் கொண்டே இருக்க, கடுப்பாகிவிட்டார் உதயநிதி.

‘‘நான் எந்த நடிகருக்கும், நடிகர்களின் ரசிகர்களுக்கும் எதிரானவன் அல்ல. ஆனால், ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்… மற்றவர்களைப் பற்றி கமென்ட் செய்யும் முன்பு, உங்களுடைய மூளையை (மூளை இருந்தால்) உபயோகியுங்கள்!’’ என்று காட்டாமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் சிம்பு ரசிகர்கள் உதயநிதி ஸ்டாலினை கழுவி ஊற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

நாம் வாழ பிறரைக் கெடுக்கக் கூடாது…!