இதோ இன்னொரு சிவகார்த்திகேயன்

516

ஸ்கை மூவீஸ் என்ற பட நிறுவனம் “மேல்நாட்டு மருமகன்” என்ற படத்தை தயாரிக்கிறது.

சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்த ராஜ்கமல் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த சந்தானம், ஜெகன், சிவகர்த்திகேயன், மிர்ச்சி செந்தில், மா.கா.பா.ஆனந்த் ஆகியோருக்கு சினிமாவில் கிடைத்த வரவேற்பு தனக்கும் கிடைக்கம் என்று நினைத்து வண்ணத்திரைக்கு அடியெடுத்து வைக்கிறார் ராஜ்கமல் .

மேல்நாட்டு மருமகன் என்று என்று பெயர் வைத்ததினாலோ என்னவோ கதாநாயகியாக வெளிநாட்டு பெண் ஒருவர் நடிக்கிறார். அதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருகிறது. நீங்காத எண்ணம் என்ற படத்தை இயக்கிய எம்.எஸ்.எஸ் இப்படத்தை இயக்குகிறார்.

காமெடி படமாக உருவாகிறது மேல்நாட்டு மருமகன்.