த்ரிஷாவை புலம்பவிட்ட விக்ரம், இயக்குநர் ஹரி..

1187

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சாமி’.

இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இப்போது ‘சாமி ஸ்கொயர்’ படம் உருவாகி வருகிறது.

‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

இப்படத்தில் விக்ரமுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என இண்டு கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்கள்.

சில வாரங்களுக்கு முன் சென்னை அம்பத்தூரில் தொடங்கப்பட்ட முதல் கட்டப் படப்பிடிப்பில் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து வட இந்தியாவில் சில முக்கிய காட்சிகளை படமாக்குவதற்காக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது படக்குழு.

டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் தற்போதைய நிலையில் சாமி ஸ்கொயர் படத்திலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார் த்ரிஷா.

‘‘Due to creative differences, I have chosen to opt out of Saamy-2, Wishing the team goodluck’’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

‘சாமி ஸ்கொயர்’ படத்தில் கதாநாயகியான கீர்த்தி சுரேஷுக்கு மட்டுமே முக்கியத்தும் உள்ளதாகவும், தனது கேரக்டர் டம்மியாக இருப்பதாகவும் தெரிய வந்ததால் த்ரிஷா விலகியுள்ளார்.

அவரது விலகல் தகவல் இயக்குநர் ஹரி, விக்ரம் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டநிலையில் இதுபற்றி யாருமே த்ரிஷாவிடம் என்ன ஏது என்று கூட விசாரிக்கவில்லையாம்.

விக்ரமும், ஹரியும் தன்னை வேண்டுமென்றே அவமானப்படுத்துவதாக நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பியிருக்கிறார் த்ரிஷா…