‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’

16

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக வில்லன்கள் கொடி கட்டிப்பறந்திருக்கிறார்கள்.

அன்றைய நம்பியார், அசோகன், வீரப்பாவில் ஆரம்பித்து இன்றைய ரகுவரன், சத்யராஜ், பிரகாஷ்ராஜ் வரை வில்லன் நடிகர்களுக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அப்படி ரசிகர்கள் கொண்டாடப்போகும் ஒரு வில்லன் நடிகராக “ஆபரேஷன் அரபைமா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார், டினி டாம்.

பஞ்ச பாண்டவர், பட்டாளம், பிராஞ்சியேட்டன் அண்ட் தி செயின்ட், இன்டியன் ருபி, பியூட்டிஃபுல், ஸ்பிரிட் உள்பட பல மலையாளப்படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் டினி டாம், ஆபரேஷன் அரபைமா படத்தில் ரகுமானுக்கு வில்லனாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மலையாள சினிமாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கலக்கிய ‘கலாபவன் மணி’யைப் போலவே கலாபவனிலிருந்து உருவான திறமையான நடிகர் மற்றும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் டினி டாம்.

எனவே ஆபரேஷன் அரபைமா படத்திற்கு பின் தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர்கள் வரிசையில் டினி டாம் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரேஷன் அரபைமா, படத்தின் இயக்குநர் ப்ராஷ், முன்னாள் கடற்படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.