தும்பா படத்துக்கு வந்த சோதனை

44

அருண்ராஜா காமராஜ் இயக்கிய ‘கனா’ படதில் ஹீரோவாக அறிமுகமானவர் தர்ஷன்.

அந்தப் படத்தைத் தொடந்து தர்ஷன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘தும்பா’.

இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கிறார். இவர் நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள்.

இயக்குனர் துரை செந்தில் குமாரின் உதவியாளரான ஹரீஷ் ராம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத், விவேக் – மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசை அமைத்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க ஃபேண்டசி படமாக உருவாகியுள்ள இந்தப்படம் மே-17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அறிவித்தபடி ‘தும்பா’ படம் மே 17 அன்று வெளியாகவில்லை! காரணம்… தும்பாவின் தமிழகவிநியோக உரிமையை வாங்கிய ‘கோட்டபடி’ ராஜேஷ். ஷி

மிஸ்டர் லோக்கல் படம் வெளியாவதால் தும்பா படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காது என்ற காரணத்தைச் சொல்லி அதன் வெளியீட்டுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டாராம்.

இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை தயாரிக்கும் ஆர்.டி.ராஜாவுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். ஹீரோ படத்தை இவர்தான் வெளியிட உள்ளார்.

எனவே சிவகார்த்திகேயனை குளிர்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் நடித்த மிஸ்டர் லோக்கல் படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தும்பாவை வெளியிடாமல் பின்வாங்கிவிட்டார். இதனால் தள்ளிப்போன ‘தும்பா’வுக்கு அடுத்தடுத்த வாரங்களில் போதிய தியேட்டர்கள் கிடைக்கவிலை.

புதிய ரிலீஸ் தேதி கிடைக்காமல் திண்டாடி கடைசியாக ஜூன் 21-ஆம் தேதி தும்பா படம் வெளியாகும் என்ற அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.