மலேஷிய கலைஞர்கள் தமிழ் தொழில்நுட்பக்கலைஞர்களின் கூட்டணியில் உருவான தோட்டம்

1114

‘ப்ளூ ஐ புரொடக்ஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘தோட்டம்’.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அரங்கண்ணல் ராஜ்.

சிங்கை ஜெகன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகிகளாக தனா மற்றும் சீன நடிகை விவியாஷான் நடித்துள்ளனர்.

இவர்களுடன் கே.எஸ்.மணியம், ரூபன் லோகன் தியாகு, ஜீவி, அகில்வர்மன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

தோட்டம் படம் குறித்து இயக்குநர் என்ன சொல்கிறார்?

‘‘ஒவ்வொரு நாடும் அந்த நாட்டின் விவசாய வருமானத்தை கொண்டே பொருளாதாரா முன்னேற்றம் அடைகின்றன! இதற்கு மலேசியாவும் விதிவிலக்கில்லை. அங்கு விவசாய கூலி தொழிலாளிகளாக பயன்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே! அதிலும் குறிப்பாக தமிழர்களே! அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்கள் கடந்த சில வருடங்களாக பெரும் வணிக சந்தையாகி விட்டன.

ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது.

அவர்கள் உருவாக்கிய தோட்டங்கள் இன்று பல ஆதிக்க சக்திகளிடம் கை மாறி விட்டது.

அப்படி கைமாற இருந்த ஒரு தோட்டத்தை தொழிலாளர்கள் எப்படி போராடி மீட்கிறார்கள் என்பதுதான் தோட்டம் படத்தின் கதை.

200 வருடங்களாக இருந்து வந்த பிரச்சனையை இந்தப்படத்தில் அலசியிருக்கிறோம்.

அதே போல கலப்பு திருமணங்களை ஆதரிக்கும் விதமாக தமிழ், பையனுக்கும் சீனப் பெண்ணுக்கும் கல்யாணம், மற்றும் தமிழ் படிப்பின் அவசியம் போன்ற சமூக விஷயங்களையும் இந்த ‘தோட்ட’த்தில் சொல்லி இருக்கிறோம்’’ என்றார்.

மலேசிய நடிகர் நடிகைகள் மற்றும் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டணியில் தோட்டம் உருவாக்கியுள்ளது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவை சதீஷ் பி.சரண் கவனித்துள்ளார்.

சாய் இசை அமைத்துள்ளார்.

தோட்டம் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.