தெறி படம் வியாபாரத்தில் சாதனை… வசூலிலும் சாதனை தொடருமா?

934

ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கும் தெறி படத்தின் முன்பதிவு 10.04.2016  ஞாயிறு அன்று தொடங்கப்பட இருப்பதாக தகவல்.

தெறி படம்  தமிழ்நாட்டில் மட்டும் 600 தியேட்டர்களிலும் கேரளாவில் 200க்கும் அதிகமான தியேட்டர்களிலும் வெளியாக இருக்கிறது.

உலகம் முழுக்க  சுமார் 3000 க்கும் அதிகமான தியேட்டர்களில் தெறி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.

இதற்கிடையில் ‘தெறி’ படம் எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டிருக்கிறது? படத்தை எந்த நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது போன்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி, தெறி படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸ் மட்டும் சுமார் 50 கோடிக்கு மேல் விற்கப்பட்டிருப்பதாக மீரான் சாகிப் தெருவில் பேசப்பட்டு வருகிறது.

சென்னை சிட்டி மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களை சத்யம் சினிமாஸ் வாங்கி இருக்கிறது.

கோயம்புத்தூர் ஏரியாவை மோனிகா ஃபிலிம்ஸ் நிறுவனம்  8 கோடிக்கு வாங்கி இருக்கிறதாம்.

திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவை  5.60 கோடிக்கு  வாங்கி இருக்கிறார் பிகே நாராயணசாமி.

இயக்குனர் அமீரின் இம்பாலா தியேட்டர்ஸ் பட நிறுவனம் மதுரை, ராமநாதபுரம் ஏரியாவை  6 .90 கோடிக்கு வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

4. 60 கோடிக்கு சேலம் ஏரியாவை 7ஜி சிவா வாங்கி இருப்பதாகவும்,  திருநெல்வேலி, கன்னியாகுமரி  ஏரியாவை 3. 25 கோடிக்கு மன்னன் ஃபிலிம்ஸ் வாங்கி இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது.

டாக்டர் ஆல்பர்ட் என்பவர் 3.50 கோடி  கொடுத்து தென்ஆற்காடு  ஏரியாவையும், அலங்கார் தியேட்டர் தேவராஜ் என்பவர் 3.25 கோடி கொடுத்து வடஆற்காடு ஏரியாவையும் வாங்கி உள்ளனராம்.

சென்னை, செங்கல்பட்டு 15 கோடி என்று வைத்துக் கொண்டால் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் 50 கோடிக்கு மேல் விற்கப்பட்டிருக்கிறது.

50 கோடிக்கு விற்கப்பட்ட தெறி 100 கோடிக்கு வசூல் செய்தால்தான், பப்ளிசிட்டி, தியேட்டர் வாடகை அல்லது பங்குத்தொகை போக படத்தை வாங்கியவர்களுக்கு லாபம் கிடைக்கும்..
வியாபாரத்தில் சாதனை படைத்த தெறி வசூலில் சாதனை படைக்குமா?