அவரோட மகன் கல்யாணத்துக்கு விஜய் வரலையாம்… தெறி படத்துக்கு தடைபோடும் பிரமுகரின் சூழ்ச்சி…

1181

விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் செங்கல்பட்டு ஏரியாவில் படம் வெளியாவதற்கான பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தெறி’ திரைப்படம் உலகம் முழுக்க தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

விஜய்க்கு ஜோடியாக சமந்தா, ஏமி ஜாக்சன் நடிக்க, வில்லனாக இயக்குநர் மகேந்திரன் நடித்திருக்கும் தெறி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

தெறி படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளநிலையில் உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளின் முன்பதிவு முடிந்துவிட்டது.

செங்கல்பட்டு ஏரியாவில் அமைந்துள்ள திரையரங்குகளில் மட்டும் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை.

தற்போது தமிழக அரசு டிக்கெட் விலையை அதிகமாக விற்பனை செய்தால் புகார் அளிக்குமாறு ஒரு எண்ணை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பைக் காரணம் காட்டி செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் தாணுவிடம் படத்தின் விலையைக் குறைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறார்கள். தெறி படத்தின் தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் தயாரிப்பாளர் தாணு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

செங்கல்பட்டு ஏரியாவில்தான் திரையரங்குகள் அதிகம், வசூலும் அதிகமாக வரும்.

எனவே இந்தப்பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், படத்தின் வசூலில் பங்கு பிரித்துக் கொள்ளலாம் என்று பேசி வருகிறார்களாம்.

தெறி படத்துக்கு செங்கல்பட்டு ஏரியா திரையரங்கு உரிமையாளர்கள் கடைசி நேரத்தில் கட்டையைப்போடுவதற்கு தமிழக அரசின் உத்தரவு காரணம் இல்லையாம். அதை சாக்காக வைத்து பழைய கணக்கைத் தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறாராம் செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகி.

அதாவது அவரது மகனின் திருமணத்துக்கு வரும்படி விஜய்யை அழைத்தாராம். அன்றைய தேதியில் படப்பிடிப்பில் இருந்ததினால் அந்த நிர்வாகியின் மகன் திருமணத்துக்கு விஜய் செல்லவில்லையாம்.

அந்த கடுப்பில்தான் இப்போது விஜய் நடித்த தெறி படத்துக்கு தடையாக நிற்கிறாராம்.

விஜய் மட்டுமல்ல, அந்த திருமணத்துக்கு ரஜினியும் கூட செல்லவில்லையாம்.

அனேகமாக, ரஜினி நடித்து வரும் கபாலி, 2.0 படங்கள் வெளியாகும்போதும், செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அந்த நிர்வாகி தெறி படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியதைப்போலவே  ஏதாவது ஏழரையை இழுப்பார் என்று தோன்றுகிறது.