தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை… -குழுவில் இடம்பெற்றுள்ள திரையுலகினர் 6 பேர் யார்?

1060

தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் ஆறுபேர் அரசு தரப்பில் ஆறு அடங்கிய குழு அமைத்து விரைவில் கேளிக்கை வரி மற்றும் தியேட்டர் கட்டணத்தை உயர்த்துவது பற்றி முடிவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற தியேட்டர் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.

திரையரங்குகளில் டிக்கெட் விலையை நிர்ணயிக்க கமிட்டி ஒன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டியில் மொத்தம் 12 பேர் இருப்பார்கள் என்றும் அதில் 6 பேர் தமிழக அரசு அதிகாரிகள் என்றும் மீதி 6 பேர் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டது.

அரசுத்தரப்பில் அந்த கமிட்டியில் இடம்பெற இருப்பது யார் என்று தெரியவில்லை.

திரைப்படத்துறை சார்பில் இடம்பெற உள்ள ஆறு பேர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால், செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ். ஆர். பிரபு, தமிழ்த்திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்பிரமணியன், அருள்பதி ஆகியோர் அந்த கமிட்டியில் இடம்பெற உள்ளனர்.

இந்த கமிட்டி தமிழக அரசு குழுவினரோடு இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி டிக்கெட் கட்டணம் மற்றும் கேளிக்கை வரி பற்றி முடிவு செய்யும் என்று சொல்லப்படுகிறது.
-ஜெ.பிஸ்மி