ரஜினியை சந்தித்த மலேசிய  வினியோகஸ்தர்

90

எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் அந்த மாநிலத்தைத் தவிர இதர மாநிலங்களும் வெளியாகும், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் உலக நாடுகள் பலவற்றிலும் வெளியாகும்.

இதற்கென்று பிரத்யேக விநியோகஸ்தர்கள் இருப்பார்கள்.

டி.எம்.ஒய். (DMY) கிரியேஷன் மலேசியா மற்றும் எஃப்.எம்.எஸ். -ல் ‘காலா’, ‘2.0’ உள்ளிட்ட 167 படங்களைத் தமிழ்நாட்டில் இருந்து மிகப்பெரிய அளவில் வெளியீட்டிருக்கிறார்கள்.

இன்னமும் பல பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் ஆகியவற்றை வெளியிடவுள்ளார்கள்.

இது குறித்தும், ரஜினியின் ‘காலா’ மற்றும் ‘2.O’ ஆகிய படங்களை வெளியிட்டது குறித்தும், டி.எம்.ஒய். (DMY) கிரியேஷன்-னின் தலைவர் ‘டத்தோ’ மொஹமது யூசோப், மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார்.