நிதி சிக்கலில் இருந்து மீண்ட தரமணி படம்…

494

தங்கமீன்கள் படத்தை இயக்கிய ராம் அடுத்து இயக்கி வரும் படம் – ‘தரமணி’.

இப்படத்தில் புதுமுகம் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்க, ஆன்ட்ரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் அஞ்சலி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

வசந்தபவன் ஹோட்டல் அதிபர் ரவி, தன்னுடைய மகனை ஹீரோவாக்குவதற்காக தொடங்கிய படம் இது.

நேரடியாக படத்தயாரிப்பில் ஈடுபடாமல் வேறு ஒருவரது பெயரில் இந்தப் படத்தை தயாரிக்கிறார் என்றும்…

தன்னுடைய மகனை ஹீரோவாகப் போட்டு படம் எடுப்பதால் தரமணி படத்துக்கு பல கோடி பைனான்ஸ் செய்துள்ளார் என்றும்…

தன் மகனுக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்ததற்காக  இயக்குநருக்கு சில லட்சங்களை  கொடுத்துள்ளார் என்றும் தரமணி படத்தைச் சுற்றி பல்வேறு உறுதிபடுத்தப்படாத தகவல்கள் உலவுகின்றன.

இவற்றிவ்ல எது உண்மையோ… ஆனால், சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட தரமணி  படத்தின் பணிகள் என்ன காரணத்தினாலோ ஒரு கட்டத்தில் முடங்கிப்போனது.

தரமணி படத்தைத் தயாரிக்கும்‘ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் நிதி சிக்கலில் இருப்பதால் படப்பிடிப்பு நடைபெறவில்லை என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், தற்போது தரமணி பட வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

இப்படத்தின் டீஸர்  சில நாட்களுக்கு முன் வெளியானது.

பாடல்களை நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து தரமணி படத்தை டிசம்பர் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.