தடைகளைத் தாண்டி வருமா தரமணி?

553

வசதி படைத்தவர்கள் தங்களின் வாரிசுகளை கதாநாயகனாக நடிக்க வைக்க சில குறுக்குவழிகளை கையாள்கிறார்கள்.

அவற்றில் ஒன்று… இயக்குநர்களுக்கு பெரிய தொகையைக் கொடுத்து தங்களின் வாரிசுகளுக்கு பட வாய்ப்பு பெறுவது.

தயாரிப்பாளர் போக்கிரி ரமேஷின் மகன் நாகா, பிசாசு படத்தில் இந்த வழியில்தான்  ஹீரோவானார்.

அவரது சகோதரரான சந்தோஷ் கூட பணம் கொடுத்து ஹீரோவானவர்தான். இயக்குநர் சுசீந்திரனிடம்  பெரும் தொகையைக் கொடுத்தே ஆதலினால் காதல் செய்வீர் படத்தில் நடித்தார்.

இன்னொரு வழி… தானே பணத்தை செலவு செய்து பினாமியாய் ஒருவரை தயாரிப்பாளராக வைத்து படம் எடுப்பது.

விரைவில் வெளிவர உள்ள மெட்ரோ படம் இந்த ரகம்.

இப்படத்தின் ஹீரோ சிரீஷ் பெரிய இடத்துப் பையன். எனவே அப்படத்தின் இயக்குநர் பெயரில்  சிரீஷின் அப்பாவே மெட்ரோ படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இதே ரீதியில்தான்  ‘தரமணி’ படத்தில் வசந்த் ரவி என்பவர் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.

இவர் யார் தெரியுமா?

வசந்தபவன் ஹோட்டல் அதிபர் ரவியின் வாரிசு.

ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பொரேஷன் பேனரில்  தரமணி படம் தயாராவதாக சொல்லப்பட்டாலும் உண்மை அதுவல்ல.

தரமணி படத்தின் உண்மையான தயாரிப்பாளர் வசந்தபவன் ரவிதான்.

கற்றது தமிழ், தங்க மீன்கள் படங்களைத் தொடர்ந்து ராம் இயக்கும் இப்படத்தில் ஆன்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார்.

நடிகை அஞ்சலி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

‘தங்க மீன்கள்’ ரிலீஸிற்கு பின்பு அறிவிக்கப்பட்ட இந்தப்படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக முடங்கிக்கிடந்தது.

படப்பிடிப்பு முடிவடைந்தும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறாமலே கிடந்தது.

பின்னர், ஒருவழியாக பட வேலைகளை முடித்தனர்.

தற்போது தரமணி படத்தை  ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறார்கள்.

இந்த நேரத்தில்…தரமணிக்கு தடங்கல் வரப்போவதாக தகவல் அடிபடுகிறது.

தரமணி படத்தைத் தயாரிப்பதாக சொல்லிக் கொள்ளும் ஜேஎஸ்கே சதீஷ்குமார் மீது  விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் மத்தியில்  சில பல புகார்கள் இருக்கிறதாம்.
அதனால் தரமணி படத்தை சுமுகமாக வெளியிட முடியாத அளவுக்கு சிக்கலாக சூழ்நிலை உருவாகி வருகிறது.

இவற்றை எல்லாம் சமாளித்து தரமணி படத்தை வெளியிடுவது மிகப்பெரிய தலைவலி என்பதால்  பணத்தைப் போட்ட வசந்தபவன் ரவி கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.

முள்ளு  மேல சேலையைப்போட்ட கதைதான்.