கேயாருக்கு தாணு வைத்த செக் – தடைவிதித்தது நீதிமன்றம்

679

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த 7–ஆம் தேதி சென்னையில் நடந்தது.

தலைவர் பதவிக்கு கேயார், கலைப்புலி தாணு போட்டியிட்டனர். கேயார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் பொறுப்பு ஏற்று பணிகளை கவனித்து வந்தார்.

தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சில தினங்களுக்கு முன் கலைப்புலி தாணு குற்றம் சாட்டினார். சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் ‘‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் விதிப்படி நடைபெறவில்லை. தேர்தல் சம்பந்தமாக விளம்பரங்கள் செய்யக்கூடாது என்று விதி உள்ளது. அதை மீறி பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுத்துள்ளனர். இது போல் சங்க விதிகள் பல மீறப்பட்டு உள்ளன. எனவே கேயார் தலைவராக செயல்பட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு தாணுவின் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர் தயாரிப்பாளர் சங்க தலைவராக கேயார் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.