தங்கர்பச்சான் மகனுக்கு தமிழ் பெயர் இல்லையே?

291

காதல் கோட்டை உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி பின்னர் அழகி என்ற படத்தின் மூலம் இயக்குநராக மாறியவர் தங்கர்பச்சான்.

பின்னர் சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம். ஒன்பது ரூபாய் நோட்டு, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போன்ற அற்புதமான படங்களை இயக்கினார்.

பின்னர், அவர் இயக்கிய களவாடிய பொழுதுகள், அம்மாவின் கைபேசி வணிகரீதியில் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

அதன் பிறகு, தங்கர்பச்சானுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பல ஹீரோக்களிடம் கால்ஷீட் போனார். யாரும் அவரிடம் கதை கேட்க ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், வேறு வழியில்லாமல் தன்னுடைய மகன் விஜித் பச்சானை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

தமிழ் தேசியம் பேசிவரும் தங்கர்பச்சான் பொதுவெளியில் தமிழ், தமிழ்நாடு, தமிழ்மண், தமிழர்கள் என பொதுவெளியில் முழங்கி வருகிறார்.

ஆனால் தன்னுடைய மகனுக்கு விஜித் என பெயர் வைத்திருக்கிறார். இது பற்றி சமூகவலைத்தளங்களில் பலரும் நக்கலடித்து வருகின்றனர்.

விஜய் பெயரிலிருந்து வி, அஜித் பெயரிலிருந்து ஜித் எழுத்துக்களை எடுத்து தன்னுடை மகனுக்கு விஜித் என்று பெயர் வைத்திருக்கிறார் போலிருக்கிறது.