வடிவேலு சாதிக்காததை தம்பிராமய்யா சாதித்தார்…

1465

காமெடியனான வடிவேலு தன்னுடைய மகனை எப்படியாவது கதாநாயகனாக்கிவிட வேண்டும் என்று கனவு கண்டார். தன்னிடம் கதை சொல்ல வருகிறவர்களிடம் எல்லாம், தன் மகனுக்காக கதையை ரெடி பண்ணச் சொன்னார். தன்னிடம் கால்ஷீட் கேட்டு வந்த தயாரிப்பாளர்களிடம், தன் மகனை ஹீரோவாக வைத்து படம் எடுக்கும்படி நெருக்கடி கொடுத்தார்.

அதனாலேயே வடிவேலுவைக் கண்டாலே தயாரிப்பாளர்கள் ஓட்டம் எடுக்கின்றனர்.

வடிவேலுவினால் சாதிக்க முடியாததை, அவரால் அவமானப்படுத்தி விரட்டப்பட்ட தம்பிராமய்யா சாதித்துவிட்டார்.

வடிவேலுவை வைத்து இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை இயக்கிய தம்பி ராமய்யாவை அந்தப் படத்தின் ரிலீஸ் நேரத்தில் அவமானப்படுத்தி விரட்டியடித்தார் வடிவேலு.

வைராக்கியத்தோடு வெளியேறிய தம்பி ராமய்யா, பின்னர் தனி காமெடியனாக ஜெயித்தார்.

சினிமாவில் தனக்குக் கிடைத்த முகவரியை பயன்படுத்தி, தன்னுடைய மகன் உமாபதியை கதாநாயகனாக்கிவிட்டார் தம்பிராமய்யா.

உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. விஜய் டி.வி.யில் சில நிகழ்ச்சிகளை இயக்கிய இன்பசேகர் என்பவர் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் உமாபதிக்கு ஜோடியாக ரேஷ்மா ரத்தோர் நடித்துள்ளார்.

இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், பாண்டியராஜன், மனோபாலா நடிக்க டி.இமான் இசை அமைத்துள்ளார்.

வருகிற 16-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். ‘அட்டகத்தி’, ‘குக்கூ’ முதலான படங்களில் ஒளிப்பதிவாளரான பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ’சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ சார்பில் சிவ ரமேஷ்குமார் தயாரித்துள்ளார்.