தேவி பட புரமோஷனில் பிரபுதேவா புராணம்… விஷாலை வெறுப்பேற்றிய தமன்னா….

871

தேவி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தைப் பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கிறதோ… இரண்டு பேருக்கு நிச்சயம் பி.பி. எகிறும்.

ஒருவர் தர்மதுரை படத்தின் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ்.

இன்னொருவர் நடிகர் விஷால்.

இவர்களுக்கும் தமன்னாவுக்கும் என்ன பஞ்சாயத்து என்று பார்ப்பதற்கு முன், தேவி படத்தின் புரமோஷனில் கரகர குரலில் தமன்னா பேசியதை கேட்போம்…

‘‘இந்தப்படத்தின் கதையை என்னிடம் சொல்வதற்காக டைரக்டர் விஜய் சார் மும்பைக்கே வந்திருந்தார்.

அப்போது அவர் சொன்ன கதையை கேட்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே விஜய் சாரிடம், ‘கதை சொன்னது போதும். இனி மேல் நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம்’ என்று சொன்னேன்.

நான் இப்படி சொன்னதும்,  ஒருவேளை எனக்கு கதை எனக்கு பிடிக்கவில்லையோ என்று விஜய் சார் கொஞ்சம் ஷாக்காகிவிட்டார்.

‘இந்த கதை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இதில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன்’’ என்று சொன்ன பிறகுதான் அவர் நார்மல் ஆனார்.

இந்தப்படத்தில் விஜய் சார், பிரபு தேவா சார், சோனு சூட், ஆர்.ஜே.பாலாஜி உடன் ஒர்க் பண்ணியது மறக்க முடியாத அனுபவம்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்தப்படத்தை 60 நாட்களில் எடுத்து முடித்திருக்கிறார் என்றால் விஜய் சார் எங்களை எப்படியெல்லாம் வேலை வாங்கியிருப்பார் என்று நினைத்து பாருங்கள்.

‘தோழா, ‘தர்மதுரை’ படங்களுக்கு பிறகு ‘தேவி’யும் எனக்கு வித்தியாசமான ஒரு படமாக அமைந்துள்ளது’’  என்று தமன்னா பேசிக்கொண்டு போனதை ஒரே ஜம்ப்பில் கடந்து வந்திருப்பீர்கள் என்று தெரியும்.

தமன்னாவுக்கும் விஷால் மற்றும் ஆர்.கே.சுரேஷுக்குமான  பஞ்சாயத்து மேட்டருக்கு வருவோம்…!

ஆர்.கே.சுரேஷ் தயாரித்த தர்மதுரை படத்தின் புரமோஷனுக்கு அழைத்தபோது தன்னை இன்னொரு நயன்தாராவாக நினைத்துக் கொண்டு முடியவே முடியாது என்று மறுத்திருக்கிறார் தமன்னா.

தர்மதுரை படம் வெளியாகி வெற்றியடைந்ததும் சக்சஸ் மீட்டுக்கு அழைத்தபோதும் இதே பதில்.

அதே தமன்னா, இப்போது தேவி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு பிரபுதேவாவின் உத்தரவுப்படி  தேவி படத்தைப் பற்றி மீடியாக்களிடம் வாசித்துத் தள்ளியதைப் பார்த்ததும் கடுப்பாகிவிட்டார் சுரேஷ்.

தர்மதுரை படத்தின் புரமோஷனுக்கு அழைத்தபோது வர மறுத்தவர், இப்போது தேவி புரமோஷனுக்கு மட்டும் எப்படி வந்தார் என்று நடிகர்  சங்கத்தின் செயலாளர் விஷாலிடம் வாய் வழியாக புகார் கொடுத்ததோடு தமன்னா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

அதைக் கேட்டதும் விஷால் விழுந்து விழுந்து சிரித்தாராம்.

அதன் பிறகு விஷால் சொன்னதுதான் ஹைலைட்…

“உங்களுக்காவது படத்தோட புரமோஷனுக்குத்தான் தமன்னா வரலை… நான் நடிக்கும் கத்தி சண்டை படத்துக்கு  ஒழுங்கா கால்ஷீட்டே கொடுக்கலை. நான் எங்கே போய் கம்ப்ளெயின்ட் கொடுக்கிறதுன்னு தெரியலை….”

என்னத்த சொல்றது?

இப்படிப்பட்ட நடிகைகளைத்தான் இந்த ஹீரோக்களும்… தயாரிப்பாளர்களும் தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்.