நயன்தாரா – பிரபுதேவா காதல்கதை படமாகிறது… நயன்தாராவாக தமன்னா நடிக்கிறார்…

691

லெங்கின்ஸை  மாற்றுவதுபோல் அடிக்கடி காதலர்களை மாற்றிக் கொண்டிருப்பவர்  நயன்தாரா.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த பிறகு முதலில் சிம்பு, பிறகு பிரபுதேவாவோ, மூன்றாவதாக உதயநிதி ஸ்டாலின், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் என தன் காதல் வாழ்க்கையை தொடர்கதையாக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது முன்னாள் காதலர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபுதேவாதான் டோக்கன் நம்பர் 2.

விஜய்யை வைத்து பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார்.

அப்போதுதான் இருவருக்கும் காமத்தீ.. ஸாரி… காதல் தீ பற்றிக் கொண்டது.

நயன்தாரா – பிரபுதேவா இருவரும் சில வருடங்கள் காதலர்களாக வலம் வந்தனர்.

நயன்தாராவின் காதல்கதைகள் யாவும் கட்டிலோடு முடிந்துபோனநிலையில்,  பிரபுதேவா உடனான காதல்தான் திருமண முயற்சி வரை சென்றது .

அவருக்காக இந்துவாக மதம் மாறினார் நயன்தாரா.

பிரபுதேவாவோ நயன்தாராவுக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்தார்.

இத்தனை தியாகங்களுக்குப் பிறகும் நயன்தாரா – பிரபுதேவா காதல் ஒருகட்டத்தில் பிரேக்கப்பில் முடிந்ததுதான் சோகத்திலும் சோகம்.

இந்த அமரகாவியத்தை காலப்போக்கில் இந்த தேசம் மறந்துவிட்டாலும் நயன்தாராவினால் பாதிக்கப்பட்ட பிரபுதேவா மறக்கவில்லை.

நயனிடம் தான் பட்ட கஷ்டங்களை தனக்கு நெருக்கமான சிலரிடம்  பகிர்ந்து கொண்டிருக்கிறார் பிரபுதேவா.

அவரது சோகத்தைக் கேட்டு உச் கொட்டியவர்களில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் ஒருவர்.

பிரபுதேவா தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும்,  நயன்தாராவின் வாழ்க்கையை வைத்தே ஒரு கதை பண்ணிவிட்டார்.

அதை பிரபுதேவாவிடம் விஜய் சொல்ல… கதையைக் கேட்ட பிரபுதேவாவுக்கு கண்ணீரே வந்துவிட்டதாம்.

தன்னுடைய பேனரில் அந்தப் படத்தை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்தப்படத்தில் நயன்தாரா வேடத்தில் அதாவது கதாநாயகியாக நடிக்கிறார் தமன்னா.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிற இப்படத்திற்கு, தமிழில் ‘காந்தா’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

காந்தா என்ற பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா?

ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதாவிடம் பணத்தைப் பறித்துவிட்டு கடைசியில் அவரை உதறிசெல்லும் விலைமகளின் பெயர்தான் காந்தா.

நயன்தாரா கதைக்கு காந்தா என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்றால்… படத்தில் என்னவோ வில்லங்கம் இருக்கிறது என்று அர்த்தம்.