இளைஞர்கள் கையில் கிடைத்த தகடு…

226

ராகாதேவி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜேந்திரன் குப்புசாமி  தயாரிக்கும் படம் ‘தகடு’

இந்த படத்தில் பிரபா மற்றும் அஜய் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார்.

மற்றும் ராஜ்கபூர், சபிதா ஆனந்த், நெல்லை சிவா, அவன் இவன் ராமராஜன், மிப்பு, ராம் கிரண், பிரியங்கா சுக்லா, ஹாசிகா, ஆயிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் தீபக்ராஜ் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு    –   எஸ்.கார்த்திகேயன்

இசை     –   சார்லஸ் மெல்வின்.எம்

பாடல்கள்   –   இளைய கம்பன்

எடிட்டிங்   –   சுரேஷ் அர்ஷ்

கலை   –   வி.சிவகுமார்

ஸ்டன்ட்    –  சூப்பர் குட் ஜீவா

நடனம்   –   அஜய் சிவசங்கர், ராக் சங்கர்

தயாரிப்பு    –    ராகாதேவி புரொடக்ஷன்ஸ்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –   எம்.தங்கதுரை

படம் பற்றி இயக்குனர் எம். தங்கதுரை…

“எதாவது புதுமையாக சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மூன்று  இளைஞர்கள், மற்றும் இரண்டு இளம் பெண்களிடம் ஒரு தகடு கிடைக்கிறது.

அந்தத் தகட்டில் இருந்த தகவல்களை படித்துப் பார்த்த அவர்கள் அதில் சொல்லப்பட்ட தகவல்படி அடர்ந்த காட்டுக்கு போகிறார்கள்.

அங்கு அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் என்ன? அவர்கள் நினைத்தை சாதித்தார்களா? என்பது தான் கதை!” என்கிறார் இயக்குனர் எம்.தங்கதுரை.

தகடு படம் வருகிற 19 ம் தேதி திரைக்கு வருகிறது.