தாரை தப்பட்டை படத்துக்கு தடை விதிக்க எண்ணிய தணிக்கைக்குழு…! – வெளியே வராத வில்லங்க தகவல்கள்…!

1007

பாலாவின் இயக்கத்தில், சசிகுமார் – வரலட்சுமி நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் படம் தாரை தப்பட்டை.

கரகாட்டக்கலைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு தியேட்டருக்கு வந்த ரசிகனை தலை தெறிக்க ஓட வைத்துவிட்டார் பாலா.

இலக்கில்லாமல் பயணிக்கும் கதை, ஆபாசமான வசனங்கள் மட்டுமின்றி தனக்கே உரிய குரூரமான காட்சிகளோடும், தாரை தப்பட்டை படத்தை எடுத்திருக்கிறார் பாலா.

தாரை தப்பட்டை படத்தைப் பார்த்த ரசிகர்கள், இந்தப் படத்தை சென்சார் எப்படி அனுமதித்தார்கள்? காசு வாங்கிட்டு சர்ட்ஃபிகேட் கொடுத்துட்டானுங்களா என்று சகட்டுமேனிக்கு கமெண்ட் அடிக்கிறார்கள்.

அதானே… புள்ளத்தாச்சி பொம்பளையை மார்ச்சுவரியில் வைத்து கொலை செய்துவிட்டு வயிற்றில் உள்ள குறைமாசக் குழந்தையை வெளியே எடுப்பதுபோன்ற காட்சியை எப்படி அனுமதித்தது தணிக்கைக்குழு?

தணிக்கை வட்டாரத்தில் விசாரித்தபோது பகீர் தகவல் கிடைத்தது.

தாரை தப்பட்டை படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர், பாலாவின் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கின்றனர்.

தாரை தப்பட்டை படத்தில் அதிகபட்சமான வன்முறையும், குரூரமான காட்சிகளும் இருப்பதால் படத்துக்கு சான்றிதழ் வழங்காமல் தடை செய்துவிடலாம் என்று சில உறுப்பினர்கள் கருத்து சொல்லி இருக்கின்றனர்.

சில உறுப்பினர்களோ… ஏ சான்றிதழ் வழங்குவதோடு, பல காட்சிகளை வெட்டி எறிய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பிறகு, இயக்குநரான பாலாவை வர வைத்து தாரை தப்பட்டை படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஒன்றுமே பதில் சொல்லாமல் அங்கிருந்து பாலா வெளியேற, தாரை தப்பட்டை படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தாரை தப்பட்டை படத்தில் நடித்துள்ள ஒருவர் பாலா சார்பில் தற்போது ஆளும்கட்சியில் உள்ள ஒரு சினிமா டைரக்டரை தொடர்பு கொண்டு, தாரை தப்பட்டை படத்துக்கு யு சான்றிதழ் கிடைக்க உதவி செய்யும்படி கேட்டிருக்கிறார்.

தற்போது தணிக்கை அதிகாரியாக உள்ளவர் அந்த இயக்குநரின் பள்ளித்தோழராம்.

அந்த அடிப்படையில் தணிக்கை அதிகாரியை தொடர்பு கொண்டிருக்கிறார் அவர்.

“பாலா இல்லாமல் வேறு ஒரு டைரக்டரின் படமாக இருந்திருந்தால் தாரை தப்பட்டை படத்தை வெளியிட முடியாதபடி தடையே விதித்திருப்பேன்… படமா எடுத்திருக்கான்… ச்சே…” என்று கடுப்படித்தாராம் தணிக்கை அதிகாரி.

ஆக… இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சம், தணிக்கைக்குழுவின் தடையிலிருந்து மயிரிழையில் தப்பித்திருக்கிறது – தாரை தப்பட்டை.

ஆனால்…. ரசிகர்கள் மாட்டிக்கிட்டாங்களே….