தண்ணி, சிகரெட் இல்லாத ‘தானா சேர்ந்த கூட்டம்’ – சூர்யாவின் பெருமிதம்

1319

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, செந்தில், சுரேஷ் மேனன் என மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்திருக்கிறது.

அனிருத் இசை அமைத்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் 1987-ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, ஸ்பெஷல் 26 என்ற ஹிந்திப் படத்தின் ரைட்ஸ் வாங்கி அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, வேறு ஒரு பாதையில் கதை பயணிப்பது மாதிரி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் குறித்து சூர்யா என்ன சொல்கிறார்?

“விக்னேஷ் சிவனுடனான முதல் சந்திப்பிலேயே படத்திற்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்பதுதான் டைட்டில் என்று சொன்னார். அதுவே எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இன்னொரு மகிழ்ச்சி… ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு பிறகு நான் நடித்த ஒரு படம் பண்டிகையில் வெளியாகிறது.

எல்லாப்படங்களின் துவக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் என்று எச்சரிக்கை வரும். இந்த படத்தில் அந்த கார்ட் இருக்காது.

தண்ணி, சிகரெட் இல்லாத சுத்தமான படத்தை எடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இதற்காக சென்சார் போர்ட் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் என்னுடன் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறி கொள்கிறேன். ‘தானா சேர்ந்த கூட்டம்’ மக்களை மகிழ்விக்கும்’’ என்றார் சூர்யா!

‘தானா சேர்ந்த கூட்டம்’ வருகிற 12 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தை தமிழகம் முழுக்க பரதன் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.

தெலுங்கில் ‘GANG’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது ‘தானா சேர்ந்த கூட்டம்’ .