இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சானமூடு, ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இப்படத்தின் அறிமுக வீடியோ காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், திருமதி லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி, இயக்குநர் பாலா, இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர்கள் சுஜாதா விஜயகுமார், ஜி.கே.எம். தமிழ் குமரன், அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி தயாரிப்பாளர்களும், நட்சத்திர நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில், ” பொதுவாகவே மேடையில் பேசுவது என்றால் சிறிது அச்சமும், தயக்கமும் இருக்கும். அதிலும் இங்கு எனக்கு முன்னால் சிற்பிகளும், பிரம்மாக்களும் அமர்ந்திருக்கிறார்கள். திரைத்துறையை பொறுத்தவரை நான் சின்னவன் தான். பிசினஸ் என்றால் தலைக்கனத்துடன் பேசுவேன். ஆனால் சினிமா என்றால் நான் எல்கேஜி தான். சினிமாவிற்கு திரையுலகினர் – ஊடகங்கள் – மக்கள் – ரசிகர்கள்- ஆகியோரின் ஆதரவும், ஆசியும் தேவை.
இந்தப் படத்தின் மூலம் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக திகழும் குடும்பத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் இவ்வளவு விரைவாக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திறமையான பெண். இவ்வளவு அன்பாகவும், கனிவாகவும் இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு.
திரு சீமான் …
இயக்குநர் பாலா …
நடிகர் சமுத்திரக்கனி ….
நேற்று அவருடன் பயணித்த அனுபவம் மறக்க முடியாதது. அதிலும் அவருடன் உரையாடிய போது, ‘நிறைய சம்பாதிக்கிறோம். அதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து வைத்து விடுவேன்’ என்று சொன்னபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய இந்த மனதிற்காகவே அவர் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும். தயாரிப்பார். வாழ்த்துகள். ” என்றார்.
நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசுகையில், ” இந்தப் படத்தின் கதையும், என்னுடைய கதாபாத்திரமும் மிக நன்றாக இருக்கிறது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி நண்பர் தான். அவரை சந்தித்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரையும் அவரது மனைவி மற்றும் தீபக்கையும் சந்தித்து இருக்கிறேன். அவருடைய விருந்தோம்பல் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். மிகவும் உண்மையான மனிதர். அவருடைய தயாரிப்பில் அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு நன்றி” என்றார்.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் …,
நடிகர் ஜெய்…,