கவுன்சில் செக்ரட்டரி கதிரேசன் மனமாற்றம்… அணிமாற்றம் ஏன்? – வெளிவராத புதிய தகவல்கள்…

1260

தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர்களில் ஒருவரான கதிரேசன், விஷாலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் என்றும், கலைப்புலி தாணுவின் அணிக்கு தாவிவிட்டார் என்றும் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.

இதுநாள்வரை விஷாலுக்கு பக்கபலமாக செயல்பட்டு வந்த கதிரேசன் கட்சிமாறியதற்கான காரணத்தையும் வெளியிட்டிருந்தோம்.

தொடர்ந்து, கதிரேசனின் அணிமாற்றம் குறித்து தகவல் திரட்டும் முயற்சியில் இறங்கியபோது மேலும் பல தகவல்கள் நமக்குக் கிடைத்தன…

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக விஷால் இருந்தாலும், அனைத்து விஷயங்களையும் தீர்மானிப்பவராக பொருளாளர் எஸ்.ஆர்.பிரபுவே இருக்கிறார்.

க்யூப் பிரச்சனை தொடங்கி பல்வேறு விஷயங்களில் எஸ்.ஆர்.பிரபு சொல்வதே விஷாலுக்கு வேதம். அவர் சொல்வதைத்தான் விஷால் கேட்கிறார் என்பதில் செயலாளரான கதிரேசனுக்கு கடும் அதிருப்தி.

நடிகர் சித்தார்த் தனக்கு கொடுக்க வேண்டிய 2 கோடியை வாங்கிக் கொடுக்க விஷால் பிரத்யேக முயற்சி செய்யவில்லை என்பதோடு, ஏஏஏ பட விவகாரத்தில் சிம்புவிடமிருந்து நஷ்டஈடு வாங்கி மைக்கேல் ராயப்பனுக்குக் கொடுக்கும் விஷயத்திலும் விஷால் நியாயமாக நடக்கவில்லை என்பதும் கதிரேசனின் வருத்தம்.

எஸ்.ஆர்.பிரபுமீதும் கதிரேசனுக்கு கடும் அதிருப்தி.

முக்கியமாக தமிழ்சினிமாவின் டிஜிட்டல் உரிமையை வாங்கும் அமேசான் நிறுவனத்தின் முகவரைப்போல் எஸ்.ஆர்.பிரபு செயல்படுவதாகவும், கவுன்சில் பெயரை வைத்து அமேசான் நிறுவனத்தில் வெப்சீரிஸ் தயாரிக்க பெரும் தொகை பெற்றுள்ளார் என்றும் கதிரேசனுக்கு தெரியவந்ததை அடுத்து தன் கடுப்பை சக நிர்வாகிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரை சமாதானப்படுத்தும்வகையில் சூர்யாவின் கால்ஷீட் வாங்கித்தருவதாக சொன்னாராம் எஸ்.ஆர்.பிரபு. அதை நம்பி வெற்றிமாறனை அழைத்துப்போய் சூர்யாவிடம் கதை சொல்ல வைத்திருக்கிறார் கதிரேசன். கதையைக் கேட்ட சூர்யா இதுவரை பதில் சொல்லவே இல்லையாம். தன்னை சமாதானப்படுத்துவதற்காக சூர்யாவின் கால்ஷீட் வாங்கித்தருவதாக எஸ்.ஆர்.பிரபு டிராமா பண்ணி இருக்கிறார் என்ற வருத்தத்தில் இருந்திருக்கிறார் கதிரேசன்.

இன்னொரு பக்கம், ஞானவேல்ராஜா ராஜினாமா செய்ததை அடுத்து செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எஸ்.எஸ். துரைராஜ், கதிரேசனை ஓவர்டேக் பண்ணுவதுபோல் பல விஷயங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டிருக்கிறார். இதுவும் கதிரேசனை கவலைப்பட வைத்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது நிர்வாகக்குழுவில் உள்ள 13 உறுப்பினர்கள் கதிரேசனுக்கு எதிராக இருந்துள்ளனர்.

இதெல்லாம் விஷாலுக்கு தெரிந்தும் கண்டும்காணாமல் இருந்ததோடு, அவர்களை என்கரேஜ் செய்தும் வந்தாராம்.

இதை எல்லாம் பொறுக்க முடியாமல்தான் தாணு பக்கம் நடையைக்கட்டிவிட்டாராம் கதிரேசன்.

-ஜெ.பிஸ்மி