கமல் வெளியிட்ட ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் ட்ரைலர்

Thugs of Hindostan

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ஆக்சன் அட்வென்சர் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ .

இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் கத்ரீனா கைப் மற்றும் பாத்திமா சனா சேக் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படம் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கி உள்ளார்.

நவம்பர் 8 ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது.

பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களான அமிதாப் பட்சன் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்காக இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தை பற்றிய தகவலை வெளியிட அமிதாப் பட்சன் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் வீடியோ ஒன்றில் பேசி சமீபத்தில் வெளியிட்டனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் இவர்களால் டப் செய்யப்படவில்லை..

பின்குரல் கொடுக்கும் கலைஞர்களை வைத்து டப்பிங் செய்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் தமிழ், ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது.

மேலும் இந்த படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டார்.