தமன்னா… விஜய் சேதுபதி… இடையில் புதிய கெமிஸ்ட்ரி…

838

தனக்குப் பிடித்த கதாநாயகிக்கு ஹீரோக்கள் சிபாரிசு செய்வது சினிமாவில் புதிதல்ல…
இதற்கு விஜய்சேதுபதி விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று அவரது மனைவி எதிர்பார்ப்பது நியாயம்.
மற்றவர்கள் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் மட்டுமில்லை நியாயமுமில்லை…
ஹீரோவாக க்ளிக்கான பிறகு அவருடன் ஜோடி போட்ட காயத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் சிபாரிசு செய்து வந்தார் விஜய்சேதுபதி.
இருவரில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அதிக முக்கியத்துவமும் கொடுத்தார்.
சின்னத்திரை நடிகையாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெரிய திரையில் நல்ல அறிமுகமும், இடமும் கிடைக்க முக்கிய காரணமே விஜய்சேதுபதிதான்.
உயர்திரு 420 உட்பட சில உப்புமா படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே தலைகாட்டி  இருந்தாலும் விஜய்சேதுபதிதான் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என தன்னுடைய படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்தார்.
அதன் பிறகு இடம்பொருள் ஏவல், தர்மதுரை படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கொடுத்ததும் விஜய்சேதுபதிதான்.
இதற்கிடையில்,  ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிப்பில் ‘காக்கா முட்டை’ படம் வெளியாகி அவருக்கு பெரும் புகழைக்கொடுத்தது.
அந்தப் படத்தில் கதையின் நாயகர்களான இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக, சேரிப்பெண் கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பைப் பார்த்த பாலிவுட் இயக்குநர் அஷிம் அலுவாலியா, தான் இயக்கவிருக்கும் ‘டாடி’ என்ற படத்தில் நடிப்பதற்காக  ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டவர் ‘டாடி’ படத்தில் அர்ஜுன் ராம்பாலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இதுவரை எல்லாமுமாக இருந்தவர் விஜய்சேதுபதிதான்.
அந்த உரிமையில் மட்டுமல்ல, பாலிவுட் வாய்ப்பு கிடைத்தால் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க மாட்டார் என்பதாலும் ஹிந்திக்குப்போக வேண்டாம் என்று சொன்னாராம் விஜய்சேதுபதி.
அவரது பேச்சை அலட்சியப்படுத்திவிட்டாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அதனால் சற்றே அப்செட்டில் இருந்த விஜய்சேதுபதி, சில நாட்களிலேயே தெளிந்துவிட்டாராம்.
யெஸ்.. அவரது கரிசனப் பார்வை தற்போது தமன்னா பக்கம் திரும்பியிருக்கிறது.
சீனு ராமசாமி இயக்கி வரும் ‘தர்மதுரை’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா நடித்தபோது இருவருக்கும் இடையில் என்னவோ ஈர்ப்பு.
தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்துக்கு யார் கதாநாயகி என்று பேச்சு வந்தபோது, தமன்னாவை சிபாரிசு செய்துள்ளார் விஜய்சேதுபதி.
ஹீரோ சொல்மிக்க மந்திரமில்லை  என்ற அடிப்படையில் தற்போது தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் கே.வி.ஆனந்த்.