அசிங்கப்பட்ட பிறகும் அடுக்குமொழி…! – திருந்தாத டி.ராஜேந்தர்

957

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்துள்ள படம் ‘போக்கிரிராஜா’.

இப்படத்தை பி.டி.எஸ். பிலிம் இண்டர் நேஷனல் சார்பில் பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளார்.

‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.

டி.இமான் இசையில் இப்படத்தின் ‘அத்துவுட்டா’ என்கிற சிங்கிள் ட்ராக் பாடல் வெளியீட்டுவிழா பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று வெளியிடப் பட்டது.

ஏழு மணிக்கு என்று திட்டமிடப்பட்ட விழா ஒன்றரை மணி நேரம் தாமதமாக 8.30 மணிக்கு தொடங்கியது.

விழாவை தாமதமாக தொடங்கியதற்கு வருத்தம் கூட தெரிவிக்காமல், போக்கிரி ராஜா படத்தின் இயக்குநர் ராம் பிரகாஷ் ராயப்பா, “சரியான நேரத்தில் விழாவைத் தொடங்கியதில் எனக்கு மகிழ்ச்சி’ என்று சொன்னதுதான் அதிர்ச்சி ப்ளஸ் காமெடி.

அது சரி.. ஏன் தாமதம்?

அத்துவுட்டா பாடலை வெளியிட்டு சிரிப்புரை…. யெஸ்… சிரிப்புரையேதான் ஆற்ற வந்த இயக்குநர் டி.ராஜேந்தர் தன்னுடைய காரை வீட்டில் நிறுத்திவிட்டு பி. டி.செல்வகுமார் அனுப்பிய ஓசி காரில் வந்திருக்கிறார்.

அந்தக் காரை ஓட்டிய ஓட்டுநர் மெதுவாக ஓட்டி வந்ததால் தாமதமாகிவிட்டதாம்.

இந்த அரிய தகவலை ‘பீப் சாங்கின் பிதாமகன்’ சிம்புவை பெற்றெடுத்த டி.ராஜேந்தரே மேடையில்பேசும்போது குறிப்பிட்டார்.

படத்துறையினரைப் பொருத்தவரை டி.ராஜேந்தர் என்றைக்குமே காமெடியன்தான்.

புலி இசை வெளியீட்டுவிழாவில் ஒரு பைத்தியக்காரனைப்போல் இவர் நடந்து கொண்ட பிறகு டி.ராஜேந்தர் என்பவர் காமெடி பீசு என்ற இந்த உண்மை உலகுக்கே தெரிந்துவிட்டது.

எனவே போக்கிரி ராஜா விழாவில் பேசும்போதும் டி.ராஜேந்தர் நிச்சயமாக உளறிக்கொட்டுவார் என்ற நம்பிக்கையில் மீடியாக்கள் காத்திருக்க…..

எதிர்பார்த்ததுபோலவே கோமாளித்தனங்கள் செய்து அரங்கத்தை சிரிக்க வைத்தார் டி.ராஜேந்தர்.

விழாவை தொகுத்து வழங்கிய ஆதவன் புலியில் 145 வகை இருப்பதை சொன்ன டி.ராஜேந்தர் இப்போது பேசுவார் என்று சொன்னதோடு, படத்தின் பெயர் போக்கிரி ராஜா என்று லீட் எடுத்துக் கொடுத்தார்.

போக்கிரி ராஜா… பக்கிரி ராஜா… துக்கிரி ராஜா என்று வாய்க்கு வந்தபடி எதையாவது உளறட்டும் என்று ஆதவன் நினைத்தார்.

தன்னை அவர் நக்கல் அடிப்பதை புரிந்து கொண்ட டி.ராஜேந்தர் சீரியஸாக பேச ஆரம்பித்துவிட்டார்…

”நான் ‘புலி’ படத்தின் விழாவுக்குப் பிறகு சினிமா விழாக்களில் கலந்து கொள்வதில்லை. பேசுவதில்லை என்று இருந்தேன்.

அந்த விழாவில் நான் புலியை அப்படி அடுக்கி வர்ணித்ததை பல லட்சம் பேர் பார்த்தார்கள். பாராட்டினார்கள்.

ஆனால் சில டிவிகளில் விமர்சித்தார்கள். அவர்கள் வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். புலி பற்றி அவ்வளவு நான் பேசக் காரணம் ஈழத்தமிழர்களின் ஆதரவாளன் நான்.

நான் சிறு சேமிப்புத் துறையில் நல்ல பதவியில் இருந்த போது ஈழத்தமிழர்களுக்காக பதவியை உதறியவன்.
புலிப் பேச்சை பலரும் விமர்சித்ததும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

யாரை கிண்டல் செய்யவில்லை? கடவுளையே கிண்டல் செய்ய வில்லையா?” என்று ஆரம்பித்தவர் சற்று நேரத்தில் தன்னை மறந்து வழக்கம்போல் காமெடியனாக மாறி பொளந்து கட்டியனார்.

புலி இசை வெளியீட்டு விழாவில் முட்டாள் தனமாக அடுக்குமொழி வசனம் பேசி அசிங்கப்பட்ட டி.ரஜேந்தர் அதன் பிறகும் திருந்தவில்லை பாருங்கள்.

டி.ராஜேந்தராவது திருந்துவதாவது?