‘சுவாமி ரா ரா’வாக மாறும் நடிகர் ஸ்ரீகாந்த்

745

நண்பன் படத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கிய ஸ்ரீகாந்த், ஓம்சாந்தி ஓம், நம்பியார் என நம்பிக்கை தரக்கூடிய படங்களில் நடித்து வருகிறார்.

நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் சந்தானமும் நடிக்கிறார். கக்கூஸ் காமெடியில் நிபுணரான சந்தானம் இந்தப்படத்தில் அதிலிருந்து மாறுபட்டு (நிஜம்மாகவா?) கட்சிக்குக் காட்சிக்கு காமெடியில் களைகட்ட வைத்துள்ளாராம்.

சந்தானம் – ஸ்ரீகாந்த் ஜோடியின் காமெடி காட்சிகள் படமாக்கப்படும்போது நம்பியார் பட யூனிட்டே அதிர்ந்து சிரிக்கும் அளவிற்கு காட்சிகளை வடிவமைத்துள்ளார் புதுமுக இயக்குநர் கணேஷா.

சுனைனா இதுவரை லிட்டர்கணக்கில் எண்ணெய் விட்டு படிய தலைவாரிய கிராமத்துப் பெண்ணாகவே நடித்துள்ளார். இதில் அழகு மிளிரும் நகரத்து பெண்ணாக வலம் வருகிறாராம். (அடடா).

விஜய் அண்டனி இசை, எம் எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு என பிரம்மாண்டமாக தயாராகி வரும் நம்பியார் படத்தை கோல்டன் ஃப்ரைடே பில்ம்ஸ் என்ற படநிறுகூனம் தயாரிக்கிறது. நம்பியார் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஸ்ரீகாந்துக்கு நம்பியார் படத்தை அடுத்து என்ன படம்? என்ற கேள்விக்கு விடையும் சுடச்சுட கிடைத்தது.

‘தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘சுவாமி ரா ரா’ வை தமிழில் பண்ணுகிறோம். சுதீர் வர்மா இயக்கிய க்ரைம் சப்ஜெக்டான இதில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல ஹீரோயினிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.