கால்பந்தை மையமாக கொண்ட படம் – ‘சாம்பியன்’

1188

வெண்ணிலா கபடி குழு , ஜீவா போன்ற விளையாட்டை மையமாக கொண்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது ‘சாம்பியன்’ என்ற புட்பாலை மையமாக கொண்ட படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

படப்பிடிப்பை கேமராவை இயக்கி தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டி துவக்கிவைத்தார்.

இதில் நடிகர் , நடிகையர் என படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார்.

ஜி.கே. ரெட்டி , அஞ்சாதே நரேன் , ஆர்.கே. சுரேஷ் , ஜெயபிரகாஷ் , ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

அரோல் குரோலி இசையில் , சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் படத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறார்.

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் கே.ராகவி இப்படத்தை தயாரிக்கிறார்.

டிசம்பர் வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.
சுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்…