சுசீந்திரன் – டி.இமான் கூட்டணியில் ‘ஏஞ்சலினா’

8

இயக்குனர் சுசீந்திரன் – டி.இமான் கூட்டணியில் உருவான ‘ஏஞ்சலினா’ படத்தின் இசை FMல் வெளியானது.

பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

மறுபுறம், திரை ரசிகர்களிடையே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் விநியோக உரிமைகளை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் அலெக்ஸாண்டர் பெற்றிருக்கிறது.

“சுசீந்திரன் திரைப்படங்கள் எப்போதுமே திரை வணிகர்களின் பட்டியலில் ஒரு வலுவான நிலையை அடைய தவறியதே இல்லை.

அழுத்தமான கருவை மிக நேர்த்தியாக வழங்கும் அவரது சூத்திரம் தான் அவரை தொடர்ந்து வெற்றியாளராக வைத்திருக்கிறது.

புதுமுகங்களை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து, சிறப்பான திரைப்படங்களை தொடர்ச்சியாக வழங்கிய இயக்குனர்களில் மிக முக்கியமானவராக இருக்கிறார்.

அந்த வகையில் ‘ஏஞ்சலினா’ படம் தொடக்கத்தில் இருந்தே கவனத்தை ஈர்த்துள்ளது, வண்ண மயமான, இளமையான விஷயங்களை காட்டும் அதே நேரத்தில், திகிலூட்டும் அம்சங்களை கொண்ட அற்புதமான கதையையும் கொண்டுள்ளது” என்றார்.

“சுசீந்திரன் – டி இமானின் அசத்தல் கூட்டணி, அவர்கள் பயணத்தின் துவக்கத்திலிருந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

ஏஞ்சலினா இசைக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது, இசை ரசிகர்களின் தற்போதைய ஃபேவரைட் பாடலான ‘ஒரு நாள்’ பாடல் எனக்கு பிடித்தமான பாடல்” என்கிறார் அலெக்ஸாண்டர்.

க்ரிஷா குரூப், சரண் சஞ்சய், சூரி, தேவதர்ஷினி மற்றும் பிரபல நடிகர்கள் பலர் நடித்திருக்கும் இந்த ஏஞ்சலினா, காதல் அம்சங்களை கொண்ட ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் வகை படம். ஆறாம் திணை ஃபிலிம்ஸ் சார்பில் கே.வி.சாந்தி தயாரித்திருக்கிறார்.