‘சூரரைப்போற்று’ படத்தில் விமானம் ஓட்டும் சூர்யா

33

‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு ‘சூரரைப்போற்று’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சூர்யாவும், சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ‘சீக்யா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தை சேர்ந்த குணீத் மோங்காவும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். ராஜீவ் மேனன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘சர்வம் தாளமயம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவர்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

ஏர் டெக்கான் விமானநிறுவனத்தைத் தொடங்கி நடுத்தர வர்க்கத்தினருக்கு விமானப்பயணத்தை சாத்தியமாக்கிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத்தழுவி இந்தப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.

அதேநேரம் கோவையைச் சேர்ந்த தொழில்அதிபரால் தொடங்கப்பட்டு பின்னர் மூடப்பட்ட பாரமவுண்ட் ஏர்வேஸ் சம்மந்தப்பட்ட காட்சிகளும் இந்தப்படத்தில் இருக்கிறது.

சுருக்கமாக சொன்னால் கப்பலோட்டிய தமிழன் படம் போல், இது விமானம் ஓட்டிய தமிழனின் கதை.