தென் கொரியாவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்.ஜி.கே.

82

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் என்.ஜி.கே. படம் வருகின்ற 31-ஆம் தேதி வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் 31-ஆம் தேதி வெளியாகும் இப்படம் வெளிநாடுகளிலும் அதே தினம் வெளியாகிறது.

என்.ஜி.கே. படம் அமெரிக்காவில் 30-ஆம் தேதி வெளியாகிறது.

அமெரிக்காவில் என்.ஜி.கே. திரையிடப்பட இருக்கும் தியேட்டர் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில் என்.ஜி.கே. படம் தென் கொரியாவிலும் வெளியாக இருக்கிறது.

தென் கொரியாவில் ஒரு தமிழ் படம் வெளியாவது இதுதான் முதல் முறை! என்.ஜி.கே. படத்துக்கு தென் கொரியாவில் வெளியாகும் தமிழ்ப்படம் என்ற பெருமை கிடைத்துள்ளது.

பொதுவாக, சூர்யா நடிக்கும் படங்களுக்கு வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான தானா சேர்ந்த கூட்டம் ரசிகர்களை கடும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.

அதனால் என்.ஜி.கே. படத்துக்கு பெரிய அளவில் ஓப்பனிங் இருக்குமா என்ற சந்தேகமும் தியேட்டர் அதிபர்கள் மத்தியில் இருந்து வருகிறது.