சூர்யா பேச்சுக்கு பா.ஜ.க. எதிர்ப்பு…. கொந்தளிக்கும் ரசிகர்கள்

96

நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும், ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து பரிசளித்து வருகிறார்.

நடிகர் சிவகுமாரின் ‘ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளை’யும், நடிகர் சூர்யாவின் ‘அகரம் ஃப்வுண்டேஷனும்’ இணைந்து இந்த வருடத்திற்கான 40-வது ஆண்டு பரிசளிப்பு விழாவை நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை குறித்து காட்டமாகப் பேசினார்.

“மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வியை அரசாங்கம் வழங்குவதில்லை. அப்படியிருக்க அவர்களை நீட் போன்ற ஏகப்பட்ட நுழைவு தேர்வுகளை எழுதச் சொல்வது எந்த முறையில் நியாயம்? இந்த விஷயத்தில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் என்று எல்லோரும் இணைந்து அரசாங்கத்தின் இந்த புதிய கல்வி கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்’’ என்று பேசினார்.

அவரது பேச்சுக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹெச்.ராஜா எதிர்வினையாற்றினார். தொடர்ந்து தமிழிசை சௌந்தர்ராஜானும் சூர்யாவுக்கு என்ன தெரியும் என்று கேட்டார். தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு ஒருபடி மேலேபோய் சூர்யாவை அரைவேக்காடு என்று சாடினார்.

இதைக் கண்டு சூர்யாவின் ரசிகர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள்.

#StandWithSuriya #SuriyaFCWarnsBJPnADMK என்று ட்விட்டரில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி கொந்தளித்து வருகின்றனர்.