ஆந்திர மீடியாக்கள் மீது அன்பு செலுத்தும் சூர்யா

138

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, பொம்மன் இரானி, ஆர்யா, சமுத்திரக்கனி நடித்திருக்கும் படம் ‘காப்பான்’.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிக்கும் படங்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

அதனால் சூர்யா நடிக்கும் அனைத்து படங்களும் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்படுவதுண்டு.

தெலுங்கில் சூர்யாவுக்கு இருந்த மார்க்கெட்டை என்.ஜி.கே. படம் காலி பண்ணிவிட்டது.

அங்கே இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்தே தீர வேண்டும் என்ற வேகத்தோடு, தற்போது ‘காப்பான்’ படத்தின் தெலுங்கு ரீமேக்குக்கு டப்பிங் பேசியிருக்கிறார் சூர்யா.

‘பந்தோபஸ்த்’ (BANDOBAST) என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு, தமிழில் வெளியாகும் அதேநாளில் தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது.

‘பந்தோபஸ்த்’ என்ற டைட்டிலுடன் கூடிய தெலுங்கு ஃபர்ஸ்ட் லுக்கை ‘பாகுபலி’ படப் புகழ் இயக்குனர் ராஜமௌலி நேற்று வெளியிட்டார்.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இயக்குனர் ராஜமௌலி ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டதால் தெலுங்கு ரசிகர்களின் கவனம் ‘காப்பான்’ படத்தின் மீது திரும்பியுள்ளது.

என்.ஜி.கே. படம் வெளியானபோது தமிழ் மீடியாக்களை தவிர்த்த சூர்யா, ஹைதராபாத்தில் சில நாட்கள் தங்கி தெலுங்கு மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தார்.

அனேகமாக ‘பந்தோபஸ்த்’ படத்தின் புரமோஷனுக்கும் ஹைதராபாத் செல்ல திட்டமிட்டுள்ளார் சூர்யா.