பொய்களைப் பரப்பும் சூர்யா ரசிகர்கள்

37

சிங்கம் படத்துக்குப் பிறகு சூர்யா நடித்த படங்கள் எதுவும் வணிகரீதியில் வெற்றியடையவில்லை. ஏறக்குறைய 9 ஆண்டுகளாக வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகிறார் சூர்யா.

துரதிஷ்டவசமாக என்ன காரணத்தினாலோ அவர் நடித்த படங்கள் தோல்வியடைந்து வருகின்றன.

விக்னேஷ்சிவன் இயக்கக்த்தில் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படம் தோல்வியடைந்தது. அதனால் அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு 45 கோடி நஷ்டம் ஏற்பட்டதால், தன்னுடைய நஷ்டத்தை ஈடுகட்ட சூர்யாவிடம் மீண்டும் கால்ஷீட் கேட்டிருக்கிறார்.

சூர்யாவின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான என்.ஜி.கே படமும் தோல்வியடைந்தது. அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு 35 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த உண்மையை சூர்யா ரசிகர்கள் ஏற்காமல் என்.ஜி.கே படத்தை வெற்றிப்படம் என்று சமூகவலைத்தளங்கள் மூலம் நம்ப வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

அதுமட்டுமல்ல, என்.ஜி.கே. படத்தை விமர்சித்த, அதை தோல்விப்படம் என்று செய்தி வெளியிடுகிற மீடியாக்கள் பற்றி ஆபாசமான கருத்துக்களை பரப்பும் வேலையிலும் ஈடுபட்டுள்ளனர்.