சுனைனா நடிக்கும் ஸ்டைலிஷ் திரில்லர் படம் ‘ரெஜினா’

70

நீர்ப்பறவை, சில்லுக்கருப்பட்டி படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த நடிகை சுனைனா, தற்போது பன்மொழிகளில் உருவாகும் ரெஜினா என்ற புதிய திரைப்படத்தில் முதன்மை கதாநாயகியாக நடிக்கிறார்.

எல்லோ பியர் புரொடக்‌ஷன் சதீஷ் நாயர் இப்படத்தினை தயாரிக்கிறார்.

இப்படம் நான்கு மொழிகளில் தயாராகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் “ரெஜினா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று டைரக்டர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.

மலையாள போஸ்டரை மலையாள டைரக்டர் ஆஷிக் அபு வெளியிட்டார்.

இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார், மலையாள பிரபலம் டோமின் டி சில்வா.

இவர், மலையாளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட “பைப்பின் சுவத்திலே பிராணயம்” மற்றும் “ஸ்டார்” படங்களை இயக்குகியவர்.

இப்படம் பெண்களை மையமாகக் கொண்ட ‘ஸ்டைலிஷ் திரில்லராக’ இருக்கும் என்று இயக்குநர் டோமின் டி சில்வா கூறியுள்ளார். மேலும் நீரோட்டத்திற்கு எதிராக ஒரு மீன் நீச்சலடிப்பதை போல, இப்படம் ஒரு சாதாரண இல்லத்தரசி ஆக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களைச் சாதிப்பதைப் பற்றியதாகவும், அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒரு திரில்லர் படமாக இருக்கும், ”என்றார்.

ரெஜினா படத்தின் பாடல்களை இசையமைத்து படத்தை தயாரிக்கிறார் சதிஷ் நாயர்.

இந்த பாடல் 4 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

சில பாடல்கள் சிங்கப்பூரில் பதிவாக்கப்பட்டது. கிராமி விருது வென்ற, டபுள் பேஸ்-இல் இசையமைக்கும் வல்லமை படைத்தவர்களில் ஒருவரான கிறிஸ்டி வாசித்து இருக்கிறார். இவருடன் ஜோண்ட் என்பவரும் வாசித்திருக்கிறார். இவர் ஜாஸ் பாணியில் வல்லமை வாய்ந்தவர்.

பாடல்களுக்கான வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர்.

பவி கே.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.