வர்மா… சாதியின் பெயர் சூட்டியது ஏன்? – பாலாவுக்கு கடும் எதிர்ப்பு

1523

தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ தமிழில் ரீ-மேக் ஆகிறது என்பதும், அதை பாலா இயக்குகிறார் என்பதும் தெரிந்த தகவல்தான்.

இந்த படத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிப்பதும் பழைய தகவல்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது என்று சொல்லப்பட்டாலும், இன்னும் இரண்டு மாதங்களாகும் என்பதே உண்மையான நிலவரம்.

தற்போது நாச்சியார் படத்தின் டப்பிங் வேலையில் இருக்கிறார் பாலா.

அதை முடித்துவிட்டு பின்னர் ஃபர்ஸ்ட்காப்பியை ரெடி பண்ணுவதற்கே ஒரு மாதத்துக்கு மேலாகிவிடும்.

அதன் பிறகே அடுத்தப்படத்தின் வேலையை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளார் பாலா.

இதற்கிடையில், அர்ஜுன் ரெட்டி ரீமேக்கின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார் இயக்குநர் பாலா.

தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற சாதி பெயரில் வெளியாகி வசூல் குவித்த இந்த படத்திற்கு தமிழில் ‘வர்மா’ என்று பெயர் சூட்டியுள்ளார் பாலா.

இந்த படத்தின் கதாநாயகி, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த எந்த விவரங்களையும் வெளியிடாதவகையில் வர்மா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வடிமைக்கப்பட்டிருந்தது.

படம் தொடர்பான மற்ற தகவல்களை விரைவில் பாலா வெளியிட இருக்கிறாராம்.

இதற்கிடையில், தன்னுடைய படத்துக்கு வர்மா என்று சாதி பெயரை சூட்டியிருப்பதற்கு பாலாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பு இல்லாதவர்…

பிற்போக்குவாதி…

சாதிப்பற்றுள்ளவர்….

– என்றெல்லாம் இயக்குநர் பாலாவை சமூகவலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

பாலா சாதிப்பற்றுள்ளவர் என்ற உண்மை இவர்களுக்கெல்லாம் இப்போதுதான் தெரிந்திருக்கிறது.

-ஜெ.பிஸ்மி