இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் கதை

208

போஸ்ட் production மற்றும் கார்பரேட், விளம்பர பட சேவைகளை வழங்கி கொண்டு இருக்கும் நிறுவனம் பிளாக் அண்ட் ஒயிட் மீடியா Solutions Private Limited நிறுவனத்தின் முதல் தயாரிப்பு
‘புரொடக்‌ஷன்ஸ் நம்பர் 1’! – ஃபேண்டஸியான காதல் கதையாக உருவாகிறது!

அறிமுக இயக்குநர் வீஜெ மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில், ரஜித் மேனன் நடிப்பில் உருவாகும் ஃபேண்டஸி காதல் கதை!

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Black and White Media Solutions Private Limited) நிறுவனம் சார்பில் ஜூட் ஆனந்த்.டே (D Jude Anantth) தயாரிப்பில், உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

விளம்பர படங்கள் மற்றும் கார்ப்பரேட் திரைப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் வீஜெ. மீனாட்சி சுந்தரம், இப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

1983 மற்றும் 2023 என இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் கதையை காதல் மற்றும் ஃபேண்டஸியாக சுவாரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் சொல்ல இருப்பதாக தெரிவித்த இயக்குநர், தற்போது படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. படம் பற்றி மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும், என்றார்.

இதில் கதாநாயகனாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் ரஜித்.CR நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விருது பெற்ற கன்னட திரைப்படமான ‘கோழி எஸ்ரூ’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரான்சீஸ் ராஜ்குமார்.ஏ (Francis Rajkumar A) ஒளிப்பதிவு, இசைத்துறையில் பல வருட அனுபவம் வாய்ந்த ஷீன் எல்.க்ளஃபோர்ட் (Shean L.Cleford) இசை, ‘யாத்திசை’ மற்றும் ‘ஞானசெருக்கு’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு, என பலம் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு தரமான படமாகவும், கமர்ஷியல் ரீதியாக பிரமாண்டமாகவும் இப்படம் உருவாக உள்ளது.

கொடைக்கானலில் உள்ள கிராமம் ஒன்றில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளது.