ஸ்டாலின் கையில் வேல் காலக்கொடுமையா? காலத்தின் தேவையா?

192

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அம்மையார்குப்பம் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முருக பக்தர்கள் முருக கடவுளுக்கு உகந்த வெள்ளி வேல் ஒன்றை ஸ்டாலினுக்கு பரிசளித்தனர்.

தமிழக முதல்வர் பழனிச்சாமி கூறுகையில், கடவுளை இழிவாக பேசியவர் கையில், கடவுள் வேல் கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.

முருகனின் வரம், அதிமுகவிற்குதான் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ, ஸ்டாலின் தேர்தலை முன்னிட்டு தீ மிதப்பார் ஆனால் தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு பேசுவார். என்று தெரிவித்துள்ளார்.

வேல்யாத்திரையைவிமர்சித்தவர்களே, கையில் வேலை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்!”  என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

ஸ்டாலின் கையில் வேல் – காலக்கொடுமையா? காலத்தின் தேவையா?

கடவுள் இல்லை என்றது – தி.க.

தேர்தல் அரசியலுக்கு வந்ததும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று தன் பகுத்தறிவு கொள்கையை தளர்த்திக்கொண்டது தி.மு.க..

கருப்பு துண்டு மஞ்சள் துண்டாக மாறியதற்கு பல கதைகள் சொல்லப்பட்டாலும் பகுத்தறிவுகொள்கையில் உறுதியாகவே இருந்தார் கருணாநிதி.

ஆதி சங்கர் எம்.பி நெற்றியில் குங்குமம் வைத்திருந்ததைப் பார்த்து – நெற்றியில் ரத்தம் வடியுது என்று கருணாநிதி கிண்டல்.

அவருடைய நகைச்சுவைதானே தவிர இந்துமத துவேசமில்லை.அவர் இந்துமத விரோதியாக அவர் இருந்ததில்லை…

திருக்குவளை – ஆதிபராசக்தி கோவில் – பூசாரி சொன்னது.

பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது நெல்சன் மாணிக்கம் சாலையில் பிள்ளையார் கோவில் கல்வெட்டில் அவரது பெயர்…

100க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம்

திமுக ஆட்சியில்தான் அதிக அளவில் கோயில் திருப்பணிகள் நடத்தப்பட்டன.

ஜெ., ஆட்சி காலத்தில் 2001-2006 வரை திருப்பணிகளுக்கு அறநிலையத்துறைக்கு 147 கோடி ரூபாய் தான் வழங்கப்பட்டது.

கருணாநிதி ஆட்சியில் 550 கோடி ரூபாய்க்கு திருப்பணிகள் நடத்தப்பட்டன.

திமுக ஆட்சியில் தான் பூசாரிகளுக்கு வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 962 மரத்தேர் உள்ளது. இவற்றில் 300 மரத்தேர்கள் பழுது காரணமாக ஓடவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து முதல்வர் கருணாநிதி 10 கோடி ரூபாய் மரத்தேர்களை சீரமைப்பதற்கு வழங்கியுள்ளார்.

பல வருடங்களாக ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரோட்டம் நடத்தியது கருணாநிதி ஆட்சியில்..

கருணாநிதி ராமானுஜம் தொலைக்காட்சித் தொடருக்கு வசனம் இயற்றியுள்ளார்.

ஸ்டாலின் மனைவி துர்கா கோவிலுக்குப் போவார். கருணாநிதி அதை மறுத்ததும் இல்லை. ஆமோதித்ததும் இல்லை.

ஆனாலும்.. `பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர், திட்டமிட்டு தி.மு.க ஏதோ இந்துக்களுக்கு எதிரிபோலச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

“தி.மு.க-வில் இருப்பவர்களில் 90 சதவிகிதத்தினர் இந்துக்கள்தான்’ என கடந்த தேர்தலிலேயே ஸ்டாலின் பேசினார்.

என் மனைவி தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கோயில்களுக்கும் சென்று வருகிறார். அவரிடம் ஒருமுறைகூட இதுதொடர்பாக நான் கேள்வி எழுப்பியதில்லை. ஏனெனில் மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் யாருடைய பாதையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும், ஸ்டாலின் இதே கருத்தைப் பேசியிருக்கிறார்.

இப்போது அதெல்லாம் நக்கல் அடிக்கப்படகிறது.

ஸ்டாலின் கையில் வேல். கழுவி ஊற்றப்படுகிறது.

இதுவரைக்கும் ஓகே. நாங்கள் இந்து மதத்துக்கு விரோதிகள் இல்லை என்பதை நிரூபிக்க நாக்கில் அலகு குத்தி காவடி எடுக்காமல் இருந்தால் சரிதான். ஓட்டுக்காக அதையும் செய்யக்கூடியவர்தான் ஸ்டாலின்.

அரோகாரா…