பெங்களூரின் புதிய பட்டு அடையாளம் ஸ்ரீபாலம் சில்க்

745

தனித்தன்மை மிக்க பட்டுப் புடவைக்கு என்றுமே தனியிடம் உண்டு. அந்த பட்டுப் புடவைகளின் பாரம்பரியத்தை உணர்ந்து நவீன தொழில்நுட்பங்களுடன், இன்றைய தலைமுறை இளம்பெண்களுக்கு ஏற்றவகையில் புதிய ரக பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்குகிறது ஸ்ரீ பாலம் சில்க்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்ரீபாலம் சில்க், பெங்களூர் பெண்களின் தேவையை கருத்தில் கொண்டு தனது சேவையை விரிவுபடுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 23/10/13 அன்று பெங்களுரில் உள்ள ஸ்ரீபாலம் சில்க் நிறுவனத்தில் வண்ணமிகு ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.

பிரபல நடிகை ஷாக்சி அகர்வால் இந்த அணிவகுப்பை துவக்கி வைத்தார். ஸ்ரீபாலம் சில்க் நிறுவனத்தில் உருவான வண்ணமிகு புடவைகளை அணிந்தபடி மேடையில் மங்கைகள் ஒயிலாக நடைபோட்டனர். இந்த ஆடை அலங்கார அணிவகுப்பில் 4 புதுரக பட்டுப்புடவைகளை ஸ்ரீ பாலம் சில்க் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பேசிய ஸ்ரீ பாலம் சில்க் நிறுவனர் ஜெயஸ்ரீ ரவி, ட்யோ டோன் சில்க், நியான் சில்க், சிவப்பு கம்பள வரவேற்பு புடவைகள், மிளிரும் வண்ணத்தில், அன்னப் பறவையின் துகில் போன்று எடை குறைவான அல்ட்ரா லைட் புடவைகளை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.

தங்க கிரீடத்தில் வைரம் பதித்தது போன்று ஸ்ரீ பாலம் சில்க் குழுமத்தின் புதிய வரவாக வந்து புதுப்புது டிசைன்களில் பட்டுப் புடவைகளை உருவாக்கி, நீண்ட நெடிய பட்டுப் பாரம்பரியத்தின் நவீன வாரிசாக திகழ்கிறார் ஜெயஸ்ரீ ரவியின் மகள் சுனிதா ரவி.

தீபாவளிக்காக இவர் கைவண்ணத்தில் உருவாகி உள்ள பட்டுப் புடவைகள் குறித்து பேசிய சுனிதா ரவி, புடவையின் இரண்டு முனைகளில் இரண்டு வெவ்வேறு பார்டர்களைக் கொண்ட டுயோ டோன் பட்டுப் புடவைகள் பார்த்தவுடன் கண்ணைப் பறிக்கும் நியான் ரக பட்டுப்புடவைகள் இன்றைய இளம் தலைமுறையின் கட்டாயத் தேர்வாக இருக்கும் என்று கூறுகிறார்.