தோல்வியைச் சந்தித்த பின்னர், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் மீண்டும் எழுந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கும் பேட்மிண்டன் வீரரை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது.
விளையாட்டு, உணர்வுகள், போராட்டம் மற்றும் ஒருபோதும் கைவிடாத மனப்பான்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகும் *‘SMASH’*, ரசிகர்களுக்கு ஒரு புதிய திரைப்பட அனுபவத்தை வழங்கும் வகையில் தயாராகி வருகிறது.
இத்திரைப்படத்தை இந்தியாவைச் சேர்ந்த *White Nights Entertainment* நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் *திரு. விஜய் சுப்ரமணியன்* மற்றும் *திரு. காசி விஸ்வநாதன்* ஆகியோரும், ரஷ்யாவைச் சேர்ந்த Smena Film Company LLC நிறுவனத்தின் தயாரிப்பாளர் எகத்தெரினா கோலுபேவா (Ekaterina Golubeva) அவர்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
‘SMASH’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா புதுடெல்லியில் உள்ள ரஷ்யன் ஹவுஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ரஷ்ய கலாச்சாரத் துறை அமைச்சர் ஸ்வெட்லானா சுப்ஷேவா (Svetlana Chupsheva) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தியா – ரஷ்யா நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் ‘SMASH’, இரு நாடுகளுக்கும் இடையிலான கலை மற்றும் கலாச்சார உறவுகளை சினிமா மூலம் மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது…