அஜித் ஆக ஆசைப்படுகிறாரா விக்ரம்….?

1588

சினிமாவில் யார் எப்போது உச்சத்துக்குப் போவார்கள்…. யார் அதளபாதாளத்தில் சறுக்கிவிழுவார்கள் என்பதை கணிக்கவே முடியாது.

அமராவதி படத்தில் அறிமுகமானபோது இத்தனை உயரத்துக்குப்போவோம் என்று அஜித்தே நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்.

அவரது திறமை, உழைப்பு, அதிர்ஷ்டம் ரசிக ஆதரவு எல்லாம் சேர்ந்து அஜித்தை உச்சத்தில் உட்கார வைத்துவிட்டன.

இந்த வாழ்க்கை… இந்த உயரம்… எல்லா ஹீரோக்களுக்கும் வாய்க்கும் என்று சொல்ல முடியாது.

ஆனாலும் பல ஹீரோக்களுக்கு நம்மால் அஜித்தின் உயரத்தை எட்ட முடியவில்லையே என்று ஆதங்கம் இருக்கிறது.

இப்படி ஒரு ஆதங்கம் நடிகர் விக்ரமுக்கு இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுமளவுக்கு அவரது நடவடிக்கையில் சமீபகாலமாக சில மாற்றங்கள்.

சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து மீடியா ஃப்ரண்ட்லி நடிகராக இருந்தவர் விக்ரம். அவரைப்போல் பத்திரிகையாளர்களுடன் நட்புடன் இருந்தவர்கள் யாருமே இருக்க முடியாது.

அப்படிப்பட்ட விக்ரம் கடந்த சில வருடங்களாக மீடியாவைக் கண்டால் விலகி ஓடுகிறார். அண்மையில் அவரது மகளுக்கு நடைபெற்ற திருமணத்துக்குக் கூட செய்தியாளர்களுக்கு அழைப்பு இல்லை.

இது எல்லாவற்றையும்விட பெரிய வருத்தம்… அவர் நடித்த ஸ்கெட்ச் படத்தின் புரமோஷனுக்குக் கூட அவர் வரவில்லை. அதே சமயம் கேரளாவுக்குப்போய் மலையாளப்பத்திரிகையாளர்களுடன் கொஞ்சிக்குலவிவிட்டு வந்திருக்கிறார்.

ஆனால் தமிழ் மீடியாக்கள் விக்ரமுக்கு கசக்கிறது.

ஒருவேளை மீடியாக்களை சந்திக்காமல் ஒதுங்கி இருந்தால் நாமும் அஜித்தாகிவிடலாம் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

– ஜெ.பிஸ்மி