மும்பை பிலிம் பெஸ்டிவலில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’

sivaranjiniyum innum sila pengalum

கேளடி கண்மனி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் வசந்த் எஸ் சாய். தற்போது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாஸ்டர் அம்ரீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது ஜியோ MAMI மும்பை பிலிம் பெஸ்டிவல் 2018 நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்த் சாய்யின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கபீர் மெஹ்தா இயக்கிய புத்தா.மூவ், தனுஜ் சந்திரா இயக்கிய எ மாண்சூன் டேட், அதுல் மோங்கியா இயக்கிய அவேக், நாகராஜ் மஞ்சுளே இயக்கிய அன் எஸ்ஸே ஆப் தி ரெயின், புத்தாடேப் தாஸ்குப்தா இயக்கிய தி ப்லைட், ஷாசியா இக்பால் இயக்கிய பிபாக் ஆகிய படங்களும் திரையிடப்படவுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – வசந்த் எஸ் சாய்

தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ சித்ரா டாக்கீஸ்

கதை – அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன்