சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர மறுத்த நடிகைகள்

54

மிஸ்டர் லோக்கல் படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததன் மூலம், ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இதற்கு முன்னதாக அவர் நடித்த ரெமோ சுமாரான வெற்றியைப் பெற்றநிலையில், அடுத்து நடித்த வேலைக்காரன், சீமராஜா படங்கள் படு தோல்வியைத்தழுவின. அதனால் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் கடனில் சிக்கி மூடுவிழா கண்டுவிட்டது.

சிவகார்த்திகேயனின் பினாமி என்று சொல்லப்பட்ட ஆர்.டி.ராஜா சுமார் 75 கோடிக்கு கடனாளியாகிவிட்டார். அவரை சிவகார்த்திகேயன் கழற்றிவிட்டுவிட்டதால் கடனை அடைக்கும் வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் வெளிப்படங்களில் நடித்து காசு பார்க்கலாம் என்ற முடிவின்படி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப்படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பாண்டிராஜ் முதலில் அணுகியது பூஜா ஹெக்டே மற்றும், கீதாகோவிந்தம் தெலுங்குப்படத்தின் நாயகியான ரஷ்மிகாவிடம்தான்.

ஏப்ரல் முதல் கால்ஷீட் கேட்டதால் டேட் இல்லை என்று இருவருமே சொல்லிவிட்டனர்.

அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தங்கச்சி கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் என்பதும், ஹீரோயின் கேரக்டர் டம்மி என்பதும் அவர்கள் நடிக்க மறுத்ததற்கு மற்றொரு காரணம்.

இவர்கள் மறுத்த பிறகே அனு இம்மானுவேலை கதாநாயகியாக்கியுள்ளனர்.