சிவகார்த்திகேயன், விக்னேஷ்சிவன் இடையில் என்ன பிரச்சனை?

81

‘போடா போடி’, ‘நானும் ரௌடிதான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பதைவிட நயன்தாராவின் லேட்டஸ்ட் காதலர் என்பதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளம்!

சிம்பு, விஜய்சேதுபதி, சூர்யா ஆகியோரை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கும் படம் என்ன? அதில் ஹீரோவாக நடிக்க இருப்பவர் யார் என்ற கேள்விகளுக்கு யூகங்களாக பல தகவல்கள் அடிபட்டன.

இறுதியாக, விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

விக்னேஷ் சிவனும், சிவகார்த்திகேயனும் முதன் முதலாக இணையும் இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க இருக்கிறது.

இப்படத்திற்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசை அமைப்பாளரான அனிருத் இசை அமைக்க இருக்கிறார்.

இப்படத்திற்கு சுருக்கமாக மூன்று எழுத்தில் ஒரு வித்தியாசமான டைட்டிலை விக்னேஷ்சிவன் யோசித்து வைத்துள்ளார் என்றும் சொல்லப்பட்டது.

இப்போது ஆர்.ரவிகுமார் இயக்கும் படம், எம்.ராஜேஷ் இயக்கும் படம், மித்ரன் இயக்கும் படம் என்று மூன்று படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த படங்களை முடித்துவிட்டு ஜூன் மாதம் முதல் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் தேதிகள் ஒதுக்கியுள்ளார் என்று புதிய தகவல் அடிபட்டது.

இந்நிலையில் நயன்தாராவை முன் வைத்து சிவகார்த்திகேயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், அதன் காரணமாக இவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ண வாய்ப்பில்லை என்றும் படத்துறையில் பரபரப்பாக படத்துறையில் பேசிக்கொள்கிறார்கள்.

நயன்தாராவினால் இருவருக்கும் பிரச்சனை என்றால்?