கதாநாயகியை துரத்தி துரத்தி காதல் செய்யும் சிவகார்த்திகேயன்

118

 

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தரா இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’.

சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் இந்த படம் வருகிற 17-ஆம் தேதி ரிலீசாகிறது!

இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘இந்த படத்தில் குடிக்கிற காட்சிகள், குடித்து விட்டு பாடுவது மாதிரியான பாடல் காட்சிகள், பெண்களை திட்டி பாடுகிற பாடல் எதுவும் வேண்டாம் சார்’ என்று எனக்கு அன்பாக கண்டிஷன் போட்டார் சிவகார்த்திகேயன். அதனால் எனது முந்தைய படங்களில் இடம்பெற்றது மாதிரியான டாஸ்மாக் காட்சிகள், குடித்து விட்டு பாடுவது மாதிரியான காட்சிகளை எல்லாம் இப்படத்தில் தவிர்த்திருக்கிறேன்.” என்றார் இயக்குநர் எம்.ராஜேஷ்.

‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் டாஸ்மாக் காட்சிகள் இல்லை என்றாலும், அந்தப்படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களில் உள்ளது போன்ற பல காட்சிகள் உள்ளன.

உதாரணமாக கதாநாயகியை துரத்தி துரத்தி காதல் பண்ணுவது… கதாநாயகியை கிண்டல் பண்ணுவது போன்று பெண்களை சிறுமைப்படுத்தும் காட்சிகள் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் இடம்பெற்றுள்ளன.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமானபோது ஓவியா, ரெஜினா போன்ற நடிகைகளை துரத்தி துரத்தி காதல் செய்தார். அவர்களை கிண்டல் பண்ணினார்.

இப்போது நயன்தாராவை துரத்தி துரத்தி காதல் செய்கிறார். அவரை கிண்டல் செய்கிறார்.

நல்லமுன்னேற்றம்தான்.