வாழ் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனா?

103

தன்னுடைய நண்பர் ஆர்.டி.ராஜா பெயரில் தொடங்கிய 24 ஏஎம் ஸ்டுடியோஸ் படநிறுவனத்தை மூடிவிட்டு, தன்னுடைய பெயரிலேயே புதிய படநிறுவனம் தொடங்கிய சிவகார்த்திகேயன், ‘கனா’ ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ ஆகிய படங்களைத் தயாரித்தார்.

கனா வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ வெற்றியைத் தரவில்லை.

இந்தப்படத்தை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தை சிவகார்த்திகேயனின் ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது படம் இது.

அவருடன் ‘மதுரம் பிக்சர்ஸ்’ என்ற படநிறுவனமும் இணைந்து வாழ் படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தை ‘அருவி’ படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில் ‘வாழ்’ படத்தின் படப்பிடிப்பு 75 நாட்கள், 100-க்கும் மேற்பட்ட லொகேஷன்களில் நடந்துள்ளது என்ற தகவலையும் பகிர்ந்தனர்.

வாழ் படத்தை சிவகார்த்திகேயனின் ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அவர் தயாரிப்பாளர் இல்லையாம்.

‘வாழ்’ படத்தின் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் சிவகார்த்திகேயனுக்கு தம்பிமுறை. தன்னுடைய தம்பி இயக்கும் படம் பிசினஸ் ஆகாமல் இருப்பதை அறிந்து, தன்னுடைய பேனரில் படம் தயாரித்தால் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்குவார்கள் என்பதால் தன்னுடைய தயாரிப்புபோல் காட்டிக்கொள்கிறாராம்.

தம்பிக்கு அண்ணன் செய்யும் உதவி?