தம்பியை மறக்காத அண்ணன்

120

சீமராஜா படத்தின் படு தோல்விக்குப் பிறகு ஆர்.டி.ராஜாவின் ‘24 AM STUDIOS’ நிறுவனத்தை முற்றிலுமாக கைகழுவிவிட்டார் சிவகார்த்திகேயன்.

இப்படி ஒரு முடிவை எடுத்த உடனேயே ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’என்ற சொந்தப்பட நிறுவனம் தொடங்கி கனா’ படத்தை தயாரித்தார்.

அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கியுள்ள இந்த படத்தில் சின்னத்திரை நடிகர் ரியோ ராஜ் கதாநாயனாக நடிக்கிறார். ஷிரின் காஞ்வாலா, கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், விவேக் பிரசன்னா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், மயில்சாமி, சுட்டி அரவிந்த், ராம் நிஷாந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஷபீர் இசை அமைத்துள்ள இந்த படத்தில் இரண்டு இளையராஜாவின் பாடல்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

‘கனா’ ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படங்களைத் தொடந்து தனது நிறுவனம் சார்பில் மூன்றாவதாக ஒரு படத்தைத் தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன்.

‘அருவி’ படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் அந்தப்படத்தை இயக்குகிறார்.

‘அருவி’ படத்தை தொடர்ந்து அருண் பிரபு புருஷோத்தமன் ‘24 AM STUDIOS’ நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானதோடு அந்த படத்தின் பூஜை கடந்த வருடம் (2018) மே மாதம் 29-ஆம் தேதி குமுளியில் நடைபெற்றது.

அதன் பிறகு சத்தமில்லாமல் இப்படத்தை ட்ராப் பண்ணிவிட்டனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸுக்காக அருண் பிரபு புருஷோத்தமன் படத்தை இயக்குகிறார்.

அருண் பிரபு புருஷோத்தமன் யார் தெரியுமா? சிவகார்த்திகேயனின் உறவினர். தம்பிமுறை. அதனாலேயே அவருக்கு பட வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.