தொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா

138

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’. எம்.ராஜேஷ் இதற்கு முன் இயக்கிய படங்களைப் போலவே இந்த படமும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.

‘வேலைக்காரன்’ படத்தை தொடந்து சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கேரடக்ருக்கு இணையான ஒரு கேரக்டரில் படம் முழுக்க வருவது மாதிரி நடித்துள்ளார் நயன்தாரா.

சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீதும் ஒருவித ஏதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் மே 17 அன்று வெளியான மிஸ்டர் லோக்கல் படம் முதல்காட்சியிலிருந்தே ரசிகர்களிடம் நெகட்டிவ்ன விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அதன்காரணமாகவோ என்னவோ மிஸ்டர் லோக்கல் படத்துக்கு ஓப்பனிங் இல்லாமல்போனதோடு, தமிழ்நாட்டில் ரிலீஸான 90 சதவிகித தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் கூட ஆகவில்லை.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா வரிசையில் ‘மிஸ்டர் லோக்கல்’ படமும் தோல்விப்பட பட்டியலில் இணைந்துவிட்டது.

அதேபோல் நயன்தாராவின் தோல்விப்படங்களான ஐரா, வேலைக்காரன், டோரா, திருநாள் வரிசையில் மிஸ்டர்.லோக்கல் படம் இணைந்துவிட்டது. இதைவைத்து நயன்தாராவுக்கு இறங்குமுகம் தொடங்கிவிட்டதாக திரையுலகில் பேச்சு அடிபடுகிறது.