சிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…

136

ஹரஹரமகாதேவகி, இருட்டுஅறையில் முரட்டு குத்து உட்பட பல படங்களை தயாரித்த ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ படம் கடந்த 17-ஆம் தேதி ரிலீசானது.

சில ஏரியாக்கள் பிசினஸ் ஆகாததினால் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா எதிர்பார்த்த பண வரவு இல்லாமல்போனது.

அதனால் 10 கோடி இருந்தால்தான் படம் வெளியாகும் என்ற இக்கட்டான சூழல் உருவானது. மலேஷியாவை சேர்ந்த விநியோகஸ்தர் 2 கோடி கொடுத்து உதவ, வேறு சிலரும் பண உதவி செய்ததால் ஒருவழியாக மிஸ்டர். லோக்கல் படம் வெளியானது.

சென்னை தவிர்த்து மற்ற ஊர்களில் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்ட கதையும் நடந்தது.

இத்தனை போராட்டத்துக்குப் பிறகு வெளியான மிஸ்டர் லோக்கல் படம் படுதோல்வியடைந்துள்ளது.

படத்தின் நாயகனான சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்ட 10 கோடி சம்பளத்தில் 5 கோடி சம்பளம் வரவே இல்லையாம்.

தற்போது படம் வெளியாகி, படம் சூப்பர் ப்ளாப் என்ற ரிசல்ட் வந்தநிலையில் சிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி கிடைக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர் படத்துறையினர்.

1 கோடி சம்பளத்துக்கு நடிக்க ஒப்புக்கொண்டு, கடைசியில் 10 கோடி சம்பளம் கேட்டு கால்ஷீட் தராமல் இழுத்தடித்தார் சிவகார்த்திகேயன்.

10 கோடி சம்பளம் தருவதாக சொல்லி கால்ஷீட் வாங்கிவிட்டு கடைசியில் 5 கோடிக்கு நாமத்தைப் போட்டுவிட்டார் தயாரிப்பாளர்.

இருவரில் யார் கில்லாடி?